காதல் ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யுவன் சங்கர் ராஜா & சூரஜ் சந்தோஷ்யுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Kadhal Aasai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் ஆசை யாரைவிட்டதோ…
உன் ஒற்றை பார்வை…
ஓடி வந்து உயிரை தொட்டதோ…

ஆண் : காதல் தொல்லை தாங்கவில்லையே…
அதை தட்டி கேட்க…
உன்னைவிட்டால் யாரும் இல்லையே…

ஆண் : யோசனை… ஓஹோ…
மாறுமோ… ஓஹோ…
பேசினால்… ஓஹோ…
தீருமோ… ஓஹோ…

ஆண் : உன்னில் என்னை போல…
காதல் நேருமோ…

ஆண் : ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று…
என் நேரமே…

ஆண் : அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே…
உன் ஒரு துளி மழையினில் தீராதோ…
என் தாகமே…

ஆண் : காதல் ஆசை யாரைவிட்டதோ…
உன் ஒற்றை பார்வை…
ஓடி வந்து உயிரை தொட்டதோ…

ஆண் : காதல் தொல்லை தாங்கவில்லையே…
அதை தட்டி கேட்க…
உன்னைவிட்டால் யாரும் இல்லையே…

—BGM—

ஆண் : பகல் இரவு பொழிகின்ற…
பனித்துளிகள் நீதானே…
வயதினை நனைக்கிறாய்…
உயிரினில் இனிக்கிறாய்…

ஆண் : நினைவுகளில் மொய்க்காதே…
நிமிடமுள்ளில் தைக்காதே…
அலையென குதிக்கிறேன்…
உலை என கொதிக்கிறேன்…

ஆண் : வீடுதாண்டி வருவேன்…
கூப்பிடும் நேரத்தில்…
உன்னால் விக்கல் வருதே…
ஏழு நாள் வாரத்தில்…
ஏழு நாள் வாரத்தில்…

ஆண் : ஒரு பார்வை பாரு…
கண்ணின் ஓரத்தில்…

ஆண் : ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று…
என் நேரமே…

ஆண் : அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே…
உன் ஒரு துளி மழையினில் தீராதோ…
என் தாகமே…

—BGM—

ஆண் : விழிகளிலே உன் தேடல்…
செவிகளிலே உன் பாடல்…
இரண்டுக்கும் நடுவிலே…
இதயத்தின் உரையாடல்…

ஆண் : காதலுக்கு விலையில்லை…
எதை கொடுத்து நான் வாங்க…
உள்ளங்கையில் அள்ளித்தர…
என்னை விட ஏதுமில்லை…

ஆண் : யாரை கேட்டு வருமோ…
காதலின் ஞாபகம்…
என்னை பார்த்த பிறகும்…
ஏன் இந்த தாமதம்…
ஏன் இந்த தாமதம்…

ஆண் : நீ எப்போ சொல்வாய்…
காதல் சம்மதம்…

ஆண் : ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று…
என் நேரமே…

ஆண் : அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே…
உன் ஒரு துளி மழையினில் தீராதோ…
என் தாகமே…


Notes : Kadhal Aasai Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Kabilan. காதல் ஆசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading