சற்றுமுன் கிடைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஷ் ராகவேந்திரா & மதுமிதாபரணிசிந்தாமல் சிதறாமல்

Satrumun Kidaitha Song Lyrics in Tamil


ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

—BGM—

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்துபோனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

—BGM—

ஆண் : மாளிகையாய் மலர் மாளிகையாய்…
உன் மனதினை அலங்கரிப்பேன்…
தேவி உந்தன் கண்களில்…
நான் தினசரி அவதரிப்பேன்…

பெண் : தீவிரமாய் தினம் தீவிரமாய்…
உன் தேடலை அனுமதிப்பேன்…
தீண்டும்போது நேர்ந்திடும்…
உன் தவறுகள் அனுசரிப்பேன்…

ஆண் : முதல் நாள் எனை தீட்டினாய்…
மறுனாள் எனை பூட்டினாய்…

பெண் : சங்கத் தமிழ் போல உன் மணம்…
சங்கமிக்கும் போது சந்தனம்…

ஆண் : இதழ் ஊராமல் இமை தேடாது…
உன் நினைவால் நிலைத்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

—BGM—

பெண் : யாத்திரைகள் என் யாத்திரைகள்…
உன் விழிகளில் நிகழ்கிறதே…
ஆசை கேட்கும் கேள்விகள்…
அட நண்பகள் குளிர்கிறதே…

ஆண் : ராத்திரிகள் என் ராத்திரிகள்…
மிக ரகசியம் ஆகிறதே…
நாளும் பூக்கும் நாபகம்…
அட வன்முறை பேசியதே…

பெண் : எதனால் இமை பார்த்தது…
எதனால் இதழ் கோர்த்தது…

ஆண் : வங்கக்கடல் ஈரம் போகுமா…
இந்த புதிர் காதல் ஆகுமா…

பெண் : இமை மூடாமல் இரை தேடாமல்…
உன் உணர்வால் விழித்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

—BGM—


Notes : Satrumun Kidaitha Song Lyrics in Tamil. This Song from Sindhamal Sitharamal (2003). Song Lyrics penned by Yugabharathi. சற்றுமுன் கிடைத்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading