காட்டுக்குயிலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பி.கே.மிஸ்ராகே.ஜே. யேசுதாஸ் & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதளபதி

Kaattukuyilu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் …
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : போடா எல்லாம் விட்டுத்தள்ளு…
பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு…
புதுசா இப்போ பொறந்தோமுன்னு…
எண்ணிக்கொள்ளடா… டோய்…

ஆண் : பயணம் எங்கே போனால் என்ன…
பாதை நூறு ஆனால் என்ன…
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்…
சும்மா நில்லடா… டோய்…

ஆண் : ஊதக்காத்து வீச…
உடம்புக்குள்ள கூச…
குப்பக்கூலம் பத்தவச்சு காயலாம்… ஹோய்…

ஆண் : தை பொறக்கும் நாளை…
விடியும் நல்ல வேளை…
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்…

ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி…
வெட்டி வச்ச செங்கரும்பு…
அத்தனையும் தித்திக்கிற நாள்தான்… ஹோய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே… ஹா… ஹா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன…
போனா என்ன வந்தா என்ன…
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட…
ஜென்மம் நான் இல்லை… ஹா… ஹா…

ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க…
தோழன் உண்டு வாழ வைக்க…
அவனைத் தவிர உறவுக்காரன்…
யாரும் இங்கில்லே…

ஆண் : உள்ளம் மட்டும் நானே…
உசுரக் கூடத்தானே…
என் நண்பன் கேட்டா…
வாங்கிக்கன்னு சொல்லுவேன்…

ஆண் : என் நண்பன் போட்ட சோறு…
நிதமும் தின்னேன் பாரு…
நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்…

ஆண் : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு…
ராகம் இட்டு தாளம் இட்டு…
பாட்டு பாடும் வானம்பாடி நாம்தான்… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல…
பாடத்தான் தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—


Notes : Kaattukuyilu Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by P. K. Mishra. காட்டுக்குயிலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading