காட்டு பயலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்தீஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Kaattu Payale Song Lyrics in Tamil


பெண் : லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே… யே…
லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே… யே…

பெண் : காட்டு பயலே…
கொஞ்சி போடா…
என்ன ஒருக்கா நீ…
மொரட்டு முயல…
தூக்கி போக…
வந்த பயடா நீ…

பெண் : கரட்டு காடா கெடந்த என்ன…
திருட்டு முழிக்காரா…
பொரட்டி போட்டு இழுகுறடா நீ…
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து…
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ…

பெண் : என் முந்தியில சொருகி வைச்ச…
சில்லறைய போல நீ…
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ…
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட…
என்ன வித்த வைச்சிருக்க நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யான பசி…
நான் உனக்கு யான பசி…
சோளப் பொரி…
நீ எனக்கு சோளப் பொரி…

பெண் : லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே… யே…
லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே… யே…

BGM

பெண் : பாசத்தால என்ன நீயும் பதற வைக்குற…
பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற…
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற…
தூரம் நின்னே என் மனச மேய வைக்குற…

பெண் : நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள…
வெக்கம் கெட்டு நிக்குறே…
உச்சி கொட்ட வைக்குறியே வாடா…

குழு (ஆண்கள்) : ஹோய்…

பெண் : நீ எச்சி ஊற வெக்குற…
என் உடம்ப தெக்குற…
எதுக்கு தள்ளி நிக்குற வாடா…

குழு (ஆண்கள்) : ஹோய்…

பெண் : நான் சாமத்துல முழிக்கிறேன்…
சார பாம்பா நெளியுறேன்…
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா…

பெண் : உன் முரட்டு ஆசை எனக்குதான்…
அதுவும் தெரியும் உனக்குத்தான்…

பெண் : என்ன செய்ய உன்ன… அ…அ…அ…
தின்னு நீக்க போறேன்…
கொஞ்சம் கொஞ்சமாக… அ…அ…
கொஞ்சி கொள்ள போறேன்…

குழு (பெண்கள்) : தித்தித்… தாரர… தைதைரா… தர…
தித்தித்… தாரர… தைதைரா…
தித்தித்… தாரர… தைதைரா… தர…
தித்தித்… தாரர… தைதைரா…
தித்தித்… தாரர… தைதைரா… தர…
தித்தித்… தாரர… தைதைதைதை…
தித்தித்… தாரர… தைதைரா… தர…
தித்தித்… தாரர… தைதைரா…

BGM

பெண் : வீச்சருவா இல்லாமலே…
வெட்டி சாய்க்குற…

குழு (ஆண்கள்) : ஹோய்…

பெண் : வேலு கம்பு வார்த்தையால…
குத்தி கிழிக்கிற…

குழு (ஆண்கள்) : ஹோய்…

பெண் : சூதானம்மா அங்க இங்க கிள்ளி வைக்குற…
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வெக்குற…

பெண் : நீ தொட்டு பேசு சீக்கரம்…
விட்டு போகும் என் ஜொரம்…
வெட்டி கதை பேச வேண்டா வாடா…
நான் ஓலைபாய விரிக்கிறேன்…
உனக்கு விருந்து வைக்கிறேன்…
முழுசா என்ன தின்னுபுட்டு போடா…

பெண் : நீ எதுக்கு தயங்கி நிக்குற…
என்ன ஒதுக்கி வைக்குற…
சும்மா முரடு புடிக்குற…
கட்டி அள்ளுடா…
உன் முரட்டு திமிரு எனக்குதான்…
அதுவும் தெரியும் உனக்குத்தான்…

பெண் : பொத்தி வைச்ச ஆசை… அ…அ…
எல்லாம் பொங்குதடா உலையா…
பொத்துக்கிட்டு ஊத்த… அ…அ…
பொங்குதடா மழையா…

பெண் : லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே…
லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே…


Notes : Kaattu Payale Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Snehan. காட்டு பயலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading