காற்றிலே நேரம் மெல்ல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிநகுல் அபயங்கர்தர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Kaatrilae Neram Mella Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க…
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க…
வானம் விரியும் நமக்காகவே…
காணா கனவெல்லாம் உருவாக்கவே…

ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை…
மனதினிலே நட்பின் நிறை…
தடுக்கத்திலே என்னை அழை…
வருவேன் பல நடை…

—BGM—

ஆண் : விளையாடி விழுந்தே…
பல பாடம் கூட தழும்பாகும்…
விரைந்தோடி தழுவும்…
உயிர் நட்பாலே காயம் இதமாகும்…

ஆண் : அடி மனதில் இனிக்கிறதே…
நானும் நீயும் இணைந்தாலே…
பிரியும் நம் வழி…
எனினும் அன்பென்றும் நெஞ்சில் குறையாதே…

ஆண் : கனவுகளின் காலத்திலே…
கரம் கொடுத்த நண்பர்களே…
யுகம் கடக்கும் விண்மீன் ஒளி…
நம்மை போல் மின்மினி…

—BGM—

ஆண் : நேற்று போலே இப்போது இல்லை இனி…
காற்றும் ஏனோ திசை மாறுது…
வேகம் முக்கி திக்காது…
தடைகளை உடை வழி தனி…

—BGM—

ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க…
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க…
அரும்பு பகை முடிந்த கதை…
பாதை இங்கே நிறைவாக…
பிரிந்தும் நம் வழி…
தொடரும் அன்பென்றும் நெஞ்சில் அலையாக…

ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை…
மனதினிலே நட்பின் நிறை…
தடுக்கத்திலே என்னை அழை…
வருவேன் பல நடை…

—BGM—


Notes : Kaatrilae Neram Mella Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Kaber Vasuki. காற்றிலே நேரம் மெல்ல பாடல் வரிகள்.


Scroll to Top