காத்தோடு காத்தானேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தனுஷ் & அதிதி ராவ் ஹைதாரிஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Kaathodu Kaathanen Song Lyrics in Tamil


ஆண் : ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…
ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…

—BGM—

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் : காகிதம் போலே ஒன்மேல…
ஓவியம் வரையும் நகமானேன்…
மோகத்தில் பெண்ணே உன்னாலே…
முத்தங்கள் வாழும் முகமானேன்…

ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழைதுளியாய்… கலந்திருந்தோம்…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

—BGM—

பெண் : நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… ஆ…

ஆண் : இலையில் மலரின் கைரேகை…
இமைகள் யாவும் மயில்தோகை…

பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்…
ஆனந்த வன்மம் மறவேனே…

ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த…
மயக்கம் தீரவே இல்லை…

பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ…
இறைவன் கைகளில் பிள்ளை…

ஆண் : கண்மணி பூ பூக்க…
காதல் விதையானோம்…

பெண் : காமன் நாட்குறிப்பில்…
காதல் கதையானோம்… ஓ… ஓ…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

—BGM—

ஆண் : பூவின் மீது கூத்தாடும்…
போதை வண்டு போலானேன்…

பெண் : புல்லின் மீது பூமியைப்போல்…
உந்தன் பாரம் நான் கண்டேன்…

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும்போது…
கரைகள் என்பதே இல்லை…

பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை…
கடலே காதலின் எல்லை…

ஆண் & பெண் : வேர்வை துளிகளிலே…
என்னை நனைத்தாயே… ஏ… ஏ…
இதயம் நொறுங்கத்தான்…
இறுக்கி அணைத்தாயே… ஏ… ஏ…

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் & பெண் : ஆயிரம் ஆசைகள் தாலாட்ட…
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே…
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்…
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்…

ஆண் & பெண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழை துளியாய் கலந்திருந்தோம்…

—BGM—


Notes : Kaathodu Kaathanen Song Lyrics in Tamil. This Song from Jail. Song Lyrics penned by Kabilan. காத்தோடு காத்தானேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading