| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| தனா | யுவன் ஷங்கர் ராஜா | கார்த்திக் ராஜா | படை வீரன் |
Ithuvarai Naan (Male) Song Lyrics in Tamil
ஆண் : உனக்கென்னடி உனக்கென்னடி…
என் உயிர்தான் தடுமாறுதே…
இனி என்னடி இனி என்னடி…
கேள்விகள் ஆயிரம் சூழுதே…
ஆண் : முன்னில்லா ஏதோ ஒன்று…
என்னை தாக்கும் இந்நேரம்…
ஏதேதோ ஆனதே என் காதல் போனதே…
நேற்றிந்த சோகம் இல்லை…
இன்று என்ன ஆனதென்று சொல்லு…
—BGM—
ஆண் : இதுவரை நான் இதுபோல் இல்லை…
இனி என்ன நான் செய்வேன் என்னை…
தினம் சிரித்தாய் நிஜமா இல்லை…
என்னை உடைத்தாய் நிம்மதி இல்லை…
ஆண் : யார் என்ன செய்தார் உன்னை…
பொய் சொல்லி வென்றாய் என்னை நீ நீ நீ நீ…
ஆண் : முழுவதுமாய் உன்னை நினைத்தேன்…
என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்…
—BGM—
ஆண் : விதி அறியாமலே விழிகளில் விழுந்த நான்…
உன் சதி தாளாமலே நாளெல்லாம் உடைகிறேன்…
திசை தெரியாமலே வழிகளை தொலைத்த நான்…
மனம் ஆறாமலே என்னுள்ளே தவிக்கிறேன்…
ஆண் : போதும் பொய்கள் போதும்…
போதும் வஞ்சம் போதும்…
போதும் வாழ்க்கை போதும்…
போ போ நீ போ…
ஆண் : முழுவதுமாய் உன்னை நினைத்தேன்…
என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்…
—BGM—
ஆண் : நீ இல்லாமலே எதுவரை செல்வது…
உன்னை எண்ணாமலே எப்படி வாழ்வது…
விழி சேராமலே விலகியா போவது…
என் விரல் கோர்க்காமலே தள்ளியா நிற்பது…
ஆண் : ஏனோ வானம் மறைய…
ஏனோ தாகம் நிறைய…
மழையாய் என்னை சேர வா வா நீ வா…
ஆண் : முழுவதுமாய் உன்னை நினைத்தேன்…
என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்…
Notes : Ithuvarai Naan (Male) Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Dhana. இதுவரை நான் பாடல் வரிகள்.

