இது காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பென்னி டயல் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Ithu Kadhalai Irinthidumo Song Lyrics in Tamil


ஆண் : இது காதலா இருந்திடுமோ…

—BGM—

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…

ஆண் : வானொலி ரசிகனை போல்…
ஏதோ நானும் உளறுகிறேன்…

பெண் : முற்றி போன பைத்தியம்போல்…
உந்தன் பேச்சால் விரைகிறேன்…

ஆண் : நானா இப்படி பேசுகிறேன்…
தானாக எல்லாமே நடக்கிறதே…

பெண் : வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான்…
உந்தன் பெயரை கெடுக்கிறதே…

—BGM—

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…

—BGM—

ஆண் : காற்றலை முதுகினில் ஏறி நானும்…
பறப்பது போலிருக்கு…

பெண் : காற்றில் காகிதம் கூட பறந்தே போகும்…
இதில் என்ன வியப்பிருக்கு…

ஆண் : பூமியின் உச்சியிலே நிற்ப்பது போல் இருக்கு…
பெண் : புலம்பலை நிறுத்திக்கோ போதுமே உன் கிறுக்கு…

ஆண் : தலைக்குள்ளே ஒரு ராட்டினம்…
சுற்றுதே உனக்கு தெரிகிறதா…

பெண் : தலைகீழாக நிற்கையில்…
தலை சுற்றி போகும் புரிகிறதா…

ஆண் : இது காதாலா இருந்திடுமோ…
பெண் : இதை கேட்பதால் எனக்கும் குழம்பிடுமோ…

—BGM—

ஆண் : தேவதை கூட்டத்தின் நடுவில் நானும்…
நடப்பது போலிருக்கு…

பெண் : ஹேய் ஹேய்… கற்பனை ரொம்ப இருக்குது உனக்கு…
வேண்டாம் பொய் எதக்கு…

ஆண் : ஹே மின் மினி பூச்சிகள்தான்…
மேயிதோ என் தலையை…

பெண் : யாரிடம் சொல்லுவதோ…
நானும்தான் முன்னிலையை…

ஆண் : எந்த நொடியில் என்னை தொலைத்தேன் நான்…
தெரிந்தால் நீயே சொல்லிவிடு…

பெண் : உந்தன் மாற்றத்திற்கு விடைதானே…
தேட நேரமில்லை ஆளைவிடு…

—BGM—

ஆண் : இது காதலா இருந்திடுமோ…
பெண் : நான் சொன்னால்தான் உனக்கு தெரிந்திடுமோ…


Notes : Ithu Kadhalai Irinthidumo Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. இது காதலா பாடல் வரிகள்.


Scroll to Top