இணையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம் & பத்மலதாஅருண் ராஜ்தடம்

Inayae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…

ஆண் : அருகே நீ இருந்தால்…
என் கைப்பேசி வாய் மூடுமே…
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்…
என் தேனீரில் தேன் கூடுமே…

பெண் : துணையே… என் உயிர் துணையே…
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா…
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்…
நான் உணர்வது ஏனடா… இணையே…

—BGM—

ஆண் : மையல் காதலாய் மாறிய புள்ளி…
என்றோ மனம் கேட்குதே…

பெண் : காதல் காமமாய் உருகொண்ட தருணம்…
நினைக்கையில் உயிர் வேர்க்குதே…

ஆண் : உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே…
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்…

பெண் : எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே…
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்…

ஆண் : ஆஆ… இணையே… என் உயிர் துணையே…
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி…

பெண் : ஆஆ… யுகமாய் கை விரல் பிடித்து…
நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா…

ஆண் : ஓ… அருகே நீ இருந்தால்…
என் கைப்பேசி வாய் மூடுமே… ஏ…
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்…
என் தேனீரில் தேன் கூடுமே…

ஆண் & பெண் : இணையே… என் உயிர் துணையே…
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி…
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்…
நான் உணர்வது ஏனடி…

ஆண் : இணையே…


Notes : Inayae Song Lyrics in Tamil. This Song from Thadam (2019). Song Lyrics penned by Madhan Karky. இணையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading