இதயம் உன்னை தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி.வி. பிரகாஷ் குமார்நான் சிகப்பு மனிதன்

Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…

ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்னே கோயில் ஆனதே…

ஆண் : இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…

ஆண் : நினைவும் உன்னை தேடுதே…
நிழலும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…

ஆண் : அடி பெண்ணே இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்…
ஓடி வந்து உயிர் விடுவேன்…

ஆண் : ஒரு பார்வை நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்…
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்…

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…

ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே…

—BGM—

ஆண் : பெண்ணே உன் நெஞ்சுக்குள்…
சோகங்கள் கூடாது… ஓகோ… ஓ…
ஆனந்த கண்ணில் அழுதாலும் தாங்காதே… ஓஓ…

பெண் : இறைவா ஒரு வரம் கொடு… ஓ…
இவன் எந்தன் மகனாகவே…
தினந்தோறும் அழவிடு… ஓ…
தாயாகி தாலாட்டுவேன்…

ஆண் : எங்கே நீ சென்றாலும்…
என் கால்கள் எப்போதும்…
உன் பின்னேதான் நடக்கும்… ஓ…

ஆண் : ஆகாயம் சாய்ந்தாலும்…
பூலோகம் ஓய்ந்தாலும்…
நம் காதல்தான் இருக்கும்…

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…

ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே…

ஆண் : இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…

ஆண் : அடி பெண்ணே இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்…
ஓடி வந்து உயிர் விடுவேன்…

ஆண் : ஒரு பார்வை நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்…
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்…


Notes : Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் உன்னை தேடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading