ஹேய் பேபி பேபி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாஏகன்

Hey Baby Song Lyrics in Tamil


ஆண் : மல்லிகா… மல்லிகா…

—BGM—

ஆண் : ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை…
ஒரு வாட்டி சொல்வாயா…
முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம்…
ஒரு பாதி சொல்…

ஆண் : ஹேய் லவ்லி லவ்லி ஒரே ஒரு பார்வை…
ஒரு தடவை பார்ப்பாயா…
ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம்…
சின்ன சின்னதாய் பார்…

ஆண் : கல்லூரிப் பாடம் சொல்லும்…
நெஞ்சில்தான் நீயும் நீயும்…
நான் கேட்கும் பாடம் என்ன…
உன் நெஞ்சம் அறியும் அறியும்…

ஆண் : மல்லிகா ஐ லவ் யூ…
மல்லிகா ஐ லவ் யூ…
ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா…
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…

குழு : மல்லிகா மல்லிகா மல்லிகா மல்லிகா…

—BGM—

ஆண் : ஓ ஏகாந்த மேகம் என்னை கேட்டதே…
அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்…
நடைப்பாதை பூக்கள் என்னை கேட்டதே… ஹோ…
மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்…

ஆண் : மலையோரம் நானும் சென்றால்…
அவள் எங்கே என்றே கேட்கும்…
இவை யாவும் கேட்கும்போது…
நான் கேட்கக் கூடாதா…

ஆண் : மல்லிகா ஐ லவ் யூ…
ஏய் மல்லிகா ஐ லவ் யூ…
ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா…
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…

—BGM—

ஆண் : உன்னை தொட்டுப் பார்த்த அந்த நேரமே…
பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே…
உன்னைக் கண்ட காற்று வந்த மோகத்தில்…
வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே…

ஆண் : உனக்கான சாலை எல்லாம்…
பனி தேசம் போலே மாறும்…
இவை யாவும் மாறும்போது…
நான் மாறக்கூடாதா…

ஆண் : கல்லூரிப் பாடம் சொல்லும்…
ஏஞ்சல்தான் நீயும் நீயும்…
நான் கேட்கும் பாடம் எல்லாம்…
உன் நெஞ்சம் அறியும் அறியும்…

ஆண் : மல்லிகா ஐ லவ் யூ…
மல்லிகா ஐ லவ் யூ
ஓ ஹோ மல்லிகா ஓ மல்லிகா…
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…

ஆண் : மல்லிகா ஐ லவ் யூ …
மல்லிகா ஐ லவ் யூ …
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா…
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…

—BGM—


Notes : Hey Baby Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Pa. Vijay. ஹேய் பேபி பேபி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading