அத்தி அத்திக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சாதனா சர்கம்வித்யாசாகர்ஆதி

Athi Athikka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…

பெண் : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

ஆண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்…
பெண் : நடந்துவந்தால் ஓா் நிழல்தான்…
ஆண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான்…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

—BGM—

பெண் : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்…
திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்…

ஆண் : எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம்…
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்…

பெண் : தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை…
ஆண் : வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை…
பெண் : ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

—BGM—

ஆண் : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்…
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்…

பெண் : அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்…
உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்…

ஆண் : கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்…
பெண் : நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்…
ஆண் : பாசத்தின் தோட்டத்தில் பூக்களும் நாமல்லோ…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

பெண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்…
ஆண் : நடந்து வந்தால் ஓா் நிழல்தான்…
பெண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான்…

ஆண் & பெண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…


Notes : Athi Athikka Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Pa.Vijay. அத்தி அத்திக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading