ஞாபகம் வருதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேரன்பரத்வாஜ்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Gyabagam Varuthe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

—BGM—

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

ஆண் : ஏதோ ஒன்றை தொலைத்தது போலே…
ஏதோ மீண்டும் பிறந்தது போலே…
தாயே என்னை வளா்த்தது போலே…
கண்களின் ஓரம் கண்ணீா் வருதே…

—BGM—

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி…
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சு…

ஆண் : முதல் முதல் குடித்த மலபாா் பீடி…
முதல் முதல் சோ்த்த உண்டியல் காசு…
முதல் முதல் பாா்த்த டூாின் சினிமா…
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி…

ஆண் : முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு…
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு…
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்…
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்…

—BGM—

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதலாக பழகிய நீச்சல்…
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்…
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா்…

—BGM—

ஆண் : முதல் முதலாக அப்பா அடித்தது…
முதல் முதலாக சாமிக்குப் பயந்தது…
முதல் முதலாக வானவில் ரசித்தது…

ஆண் : முதல் முதலாக அரும்பிய மீசை…
முதல் முதலாக விரும்பிய இதயம்…
முதல் முதலாக எழுதிய கடிதம்…
முதல் முதலாக வாங்கிய முத்தம்…

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…


Notes : Gyabagam Varuthe Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. ஞாபகம் வருதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading