வெண்ணிலாவே வெள்ளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ்.சித்ராவித்யாசாகர்செங்கோட்டை

Vennilave Vellai Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

பெண் : ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…

ஆண் : உன்னை நான் அள்ள வேண்டும்…
உயிரெல்லாம் துள்ள வேண்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கட்டுத்தறிகள் மீறலாம்…
ஆண் : சிட்டுக்குருவி ஆகலாம்…

குழு : ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

BGM

ஆண் : தருகின்ற முத்தத்தை வாங்கிவிடு போதும்…
வாங்கி வைத்த முத்தத்தை தந்துவிடு போதும்…

பெண் : உடையோடு காற்றாக நுழைந்துவிடு போதும்…
உயிருக்குள் மழையாக விழுந்துவிடு போதும்…

ஆண் : வாவென்ற சொல்லுக்கு வளைந்துகொடு போதும்…
வள்ளல் போல் ஆடைகளை வழங்கிவிடு போதும்…

பெண் : தாங்காது தாங்காது தள்ளியிரு போதும்…
தங்கத்தை தவணையிலே கொள்ளையிடு போதும் போதும்…

குழு : ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

BGM

பெண் : கலைகின்ற முடி கொஞ்சம் கோதிவிடு போதும்…
கண்ணோடு கண் வைத்து மூடிவிடு போதும்…

ஆண் : ஆ… மஞ்சத்தில் சொன்னபடி செய்துவிடு போதும்…
மற்றபடி சுதந்திரமாய் இருந்துவிடு போதும்…

பெண் : விடிகின்ற வரை என்னை அள்ளியெடு போதும்…
விடியாது என்று மட்டும் சொல்லிவிடு போதும்…

ஆண் : இடை மீது காற்றாடை உடை ஒன்று போதும்…
இடைவேளை இல்லாத இன்பங்கள் போதும் போதும்…

குழு :ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

பெண் : ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…

ஆண் : உன்னை நான் அள்ள வேண்டும்…
உயிரெல்லாம் துள்ள வேண்டும்…

பெண் : கட்டுத்தறிகள் மீறலாம்…
ஆண் : சிட்டுக்குருவி ஆகலாம்…

குழு :ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…


Notes : Vennilave Vellai Poove Song Lyrics in Tamil. This Song from Sengottai (1996). Song Lyrics penned by Vaali. வெண்ணிலாவே வெள்ளை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading