கிற கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாநகுல் அபியங்கர் & மோகனா போகராஜுஜஸ்டின் பிரபாகரன்டியர் காம்ரேட்

Gira Gira Gira Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

குழு : எளந்தாரி கிறுக்கா போறானே… ஏஏஏ…
பெண் : போ வேல நெறையா கெடக்கே… ஹோய்…

பெண் : கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

—BGM—

ஆண் : நனைஞ்ச பிறகு நனைவது தவறா…
அலைய தடுக்க சிலந்தியின் சுவரா…
ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா…
கூட இருப்பேனே… ஏஏ…

ஆண் : கனவ தடுக்க வழிமுறை இருக்கா…
தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா…
மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா…
காலம் இருக்குதே…

ஆண் : நீ போடும் தூறல் பொய் பாடல்…
ஆனாலும் நானே தாலாட்டை போலே…
ரசிப்பேனே சிரிப்பேனே…

—BGM—

பெண் : கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…

குழு : அம்மாயி சொன்ன சொல்ல வச்சுகோடி…
கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி…
மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி…
அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி…

—BGM—

ஆண் : எவருக்கெவர படைச்சது முதலில்…
அவருக்கவர அனுப்பிடும் முடிவில்…
இடையில் விழுந்த அழகிய வெளிச்சம்…
கடந்து போனது… ஏஏ…

ஆண் : கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா…
பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா…
அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே…
பொழுது போகுதே…

ஆண் : யாரோடி நீயே பனி தீயே…
மருந்தாகும் நோயே…
நீ தீண்டும் போதே…
உணர்ந்தேனே எனை நானே…

—BGM—

பெண் : கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…


Notes : Gira Gira Gira Song Lyrics in Tamil. This Song from Dear Comrade (2019). Song Lyrics penned by Karthik Netha. கிற கிற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading