கணபதியே வருவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்விநாயகர் பாடல்கள்

Ganapathiye Varuvaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கணபதியே வருவாய் அருள்வாய்…
கணபதியே வருவாய் அருள்வாய்…
கணபதியே வருவாய்…

BGM

ஆண் : மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க… ஆஆஆஆ…
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க…
மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க…
மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க…
கணபதியே வருவாய்…

BGM

ஆண் : ஏழு சுரங்களில் நானிசை பாட…
எங்குமே இன்பம் பொங்கியே ஓட…
ஏழு சுரங்களில் நானிசை பாட…
எங்குமே இன்பம் பொங்கியே ஓட…

ஆண் : தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட…

BGM

ஆண் : தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட…
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட…
கணபதியே வருவாய்…

BGM

ஆண் : தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க…
தொனியும் மணியென கணீரென்றொலிக்க…

BGM

ஆண் : தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க…
தொனியும் மணியென கணீரென்றொலிக்க…

ஆண் : ஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க…
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க…
கணபதியே வருவாய் அருள்வாய்…
கணபதியே வருவாய்…

BGM


Notes : Ganapathiye Varuvaai Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. கணபதியே வருவாய் பாடல் வரிகள்.


Scroll to Top