ஃபேமிலி பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜெய்ராம் பாலசுப்ரமணியன், பாம்பே ஜெயஸ்ரீ & தேபப்ரியா அதிகாரிகிரிஷ் கோபாலகிருஷ்ணன்வீட்ல விசேஷம்

Family Paattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…

ஆண் : யாரும் இல்லை என்றுதான்…
இங்கு யாருமே இல்லை…
ஆதி பகவன் வீட்டிலே…
என்றும் அன்புக்கேதெல்லை…

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…

BGM

ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா…
இதயம் நமக்கு சின்னதா…
கவலை மறந்து உறவில் கலந்து…
செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்…

பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்…
வரங்கள் கிடைக்கும் பூமியிலே…
கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்…
சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே…

ஆண் & பெண் : இது பாச மலர்களின் தோட்டமே…
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே…
அழகோ அழகு எந்தையும் தாயும்…
மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே…

BGM

பெண் : உடைந்த இதயங்கள் சேருமா…
உறவில் இதயங்கள் உடையுமா…
விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா…
விலகும் நெஞ்சங்கள் விரும்புமா…

பெண் : பார்த்து பழகிய மனசுதான்…
பழச மறந்திடுமா…
பழச மறக்க நினைக்கயில்…
மீண்டும் நினைத்திடுமா…

ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ…
வரங்கள் கிடைக்கும் பூமியிலே…
கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து…
உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு கண்ணீரை ஊற்றுவதா…

BGM

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…

ஆண் : யாரும் இல்லை என்றுதான்…
இங்கு யாருமே இல்லை…
ஆதி பகவன் வீட்டிலே…
என்றும் அன்புக்கேதெல்லை…

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…

BGM


Notes : Family Paattu Song Lyrics in Tamil. This Song from Veetla Vishesham (2022). Song Lyrics penned by Pa. Vijay. ஃபேமிலி பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top