என்னுடைய மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & சுஜாதா மோகன்சிற்பிநம்ம ஊரு ராசா

Ennudaiya Maadapura Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…

ஆண் : ஊருக்குள்ள நீயிருந்தும்…
உள்ளத்திலே நினைப்பிருந்தும்…
வேறுபட்டு நீயும் அப்படி…
நானும் இப்படி ஆனோமே…

ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…

BGM

ஆண் : மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்…
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்…
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி…

ஆண் : மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்…
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்…
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி…

ஆண் : உன்னைத்தொட்ட நினைவு வந்து…
என்னைத்தொட்டு துயரம் தந்து…
கண்ணைத்தொட்டு கலங்க வைப்பது குறையவில்லையடி…

ஆண் : இன்று உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும்…
உறவுயில்லையடி…
இங்கு உனது கதையும் எனது கதையும்…
விதியின் கையிலடி…

ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…

BGM

பெண் : என்னுடைய மனசுக்குள்ள எட்டு வைச்சு புகுந்த உன்னை…
தொட்டுவிட எனக்கும் மனசில் விருப்பம் உள்ளதைய்யா…
என்னுடைய மனசுக்குள்ள எட்டு வைச்சு புகுந்த உன்னை…
தொட்டுவிட எனக்கும் மனசில் விருப்பம் உள்ளதைய்யா…

பெண் : மொட்டுவிடும் விருப்பத்தையே கட்டிவைச்சு தடுப்பதுபோல்…
சுத்தி உள்ள தடைகள் எனக்கு நடுவில் நிக்குதைய்யா…
தினம் எனது மனது உனது நினைவில் மாலை கட்டுதைய்யா…
எந்தன் இதயக்கதவை உனது நினைவு தினமும் தட்டுதைய்யா…

ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…

பெண் : ஊருக்குள்ள நீயிருந்தும்…
உள்ளத்திலே நினைப்பிருந்தும்…
வேறுபட்டு நீயும் அப்படி நானும் இப்படி ஆனோமே…

ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
என்னிடத்திலே சேருமா இளமானே…


Notes : Ennudaiya Maadapura Song Lyrics in Tamil. This Song from Namma Ooru Raasa (1996). Song Lyrics penned by Kalidasan. என்னுடைய மாடப்புறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading