என்னை சாய்த்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Ennai Saaithaalae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…
மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தேன்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…
விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

—BGM—

ஆண் : நேற்று போலே வானம்…
அட இன்றும் கூட நீலம்…
என் நாட்கள்தான் நீளும்…

பெண் : தள்ளிப் போக எண்ணும்…
கால் பக்கம் வந்து பின்னும்…
கேட்காதே யார் சொல்லும்…

ஆண் : பறவை நான் சிறகு நீ…
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்…

பெண் : பயணம் நான் வழிகள் நீ…
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

—BGM—

ஆண் : மாலை வந்தால் போதும்…
ஒரு நூற்றி பற்றில் தேகம்…
செங்காந்தள் போல் காயும்…

பெண் : காற்று வந்து மோதும்…
உன் கைகள் என்றே தோன்றும்…
பின் ஏமாற்றம் தீண்டும்…

ஆண் : தவிப்பதை மறைக்கிறேன்…
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்…

பெண் : கனவிலே விழிக்கிறேன்…
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
ராரா ராரா ரா…
இனி வாழ்வேனோ இனிதாக…

பெண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…

பெண் : மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தாள்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…

பெண் : விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

—BGM—


Notes : Ennai Saaithaalae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Thamarai. என்னை சாய்த்தாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading