என்ன இந்த மாற்றமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மதுமிதாசபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Enna Indha Matrammo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

ஆண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

பெண் : உன் புண் சிரிப்பில் என் உலகத்தையே…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

—BGM—

ஆண் : சின்னச்சின்னப் புன்னகையில்…
என்னைப பரித்தாய்…
வண்ண வண்ண கனவுகள்…
கண்ணில் கொடுத்தாய்…

ஆண் : சிறிய இதயத்தில் பெரிய காதலை…
தந்தாயடி என் அன்பே…

பெண் : மெல்ல மெல்ல மனசுக்குள்…
இடம் பிடித்தாய்…
மின் மினிக்கும் மின்னலைப்போல்…
ஒளிக்கொடுத்தாய்…

பெண் : உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்…
வந்தாயடா என் அன்பே…

ஆண் : ஒரு பார்வைப் பார்க்கும் போதிலே…
எந்தன் தாகம் வானம் ஏறுதே…
மறு பாதிப்பார்க்கும் போதிலே…
எந்தன் ஜென்ம சாபம் தீருமோ…

பெண் : என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல…
நான் கேட்டேனே…

ஆண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

—BGM—

பெண் : சுற்றி உந்தன் முகம் அன்றி…
ஏதும் இல்லையே…
மற்றபடி வேற ஒன்னும்…
தொல்லை இல்லையே…

பெண் : உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய்…
திண்டாடுதே என் நெஞ்சம்…

ஆண் : நெற்றிப்பொட்டில் நேற்றுவரை…
காய்ச்சல் இல்லையே…
நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே…

ஆண் : உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய்…
கொண்டாடுதே என் நெஞ்சம்…

பெண் : உனைப் பார்த்துக் கொஞ்சிப் பேசத்தான்…
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே…
உனைப் பார்த்துப் பேசும் நேரத்தில்…
எந்தன் வார்த்தை ஊமையாகுதே…

ஆண் : கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா…
உன் இதழ்கள் சொல்லும்…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…


Notes : Enna Indha Matrammo Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன இந்த மாற்றமோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading