என்ன அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஷிவாலவ் டுடே

Enna Azhagu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன அழகு எத்தனை அழகு…
கோடி மலர் கொட்டிய அழகு…
இன்று எந்தன் கை சேர்ந்ததே…

ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு…
சிறு நெஞ்சை கொத்திய அழகு…
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே…

ஆண் : எந்தன் உள்ளங்கையில்…
அவள் உயிரை வைத்தாள்…
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்…
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்…

ஆண் : நான் காதலின் கடலில்…
விழுந்துவிட்டேன்…
நீ கரம் ஒன்று கொடுத்தாய்…
எழுந்து விட்டேன்…

ஆண் : என்ன அழகு எத்தனை அழகு…
கோடி மலர் கொட்டிய அழகு…
இன்று எந்தன் கை சேர்ந்ததே…

BGM

ஆண் : அன்பே உன் ஒற்றை பார்வை…
அதைதானே யாசிதேன்…
கிடையாதென்றால் கிளியே என்…
உயிர் போக யோசித்தேன்…

ஆண் : நான்காண்டு தூக்கம் கெட்டு…
இன்று உன்னை சந்தித்தேன்…
காற்றும் கடலும் நிலவும்…
அட தீ கூட தித்திதேன்…

ஆண் : மாணிக்க தேரே…
உன்னை மலர் கொண்டு பூசிதேன்…
என்னை நான் கில்லி…
இது நிஜம் தான சோதித்தேன்…

ஆண் : இது போதுமே இது போதுமே…
இனி என் கால்கள்…
வான் போகுமே…

ஆண் : என்ன அழகு எத்தனை அழகு…
கோடி மலர் கொட்டிய அழகு…
இன்று எந்தன் கை சேர்ந்ததே…

BGM

ஆண் : நான் கொண்ட ஆசை எல்லாம்…
நான்காண்டு ஆசைதான்…
உறங்கும் போதும் ஒலிக்கும் அடி…
உன் கொலுசின் ஓசைதான்…

ஆண் : நீ வீசும் பார்வை இல்லை…
நெருப்பாச்சு நெஞ்சம்தான்…
வலியின் கொடுமை ஒழிய…
அடி தமிழ் வார்த்தை கொஞ்சம்தான்…

ஆண் : இன்றேதான் பெண்ணே…
உன் முழு பார்வை நான் கண்டேன்…
கை தொட்ட நேரம்…
என் முதல் மோட்சம் நான் கொண்டேன்…

ஆண் : மஹா ராணியே…
மலர் வாணியே…
இனி என் ஆவி…
உன் ஆவியே…

ஆண் : என்ன அழகு எத்தனை அழகு…
கோடி மலர் கொட்டிய அழகு…
இன்று எந்தன் கை சேர்ந்ததே…

ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு…
சிறு நெஞ்சை கொத்திய அழகு…
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே…

ஆண் : எந்தன் உள்ளங்கையில்…
அவள் உயிரை வைத்தாள்…
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்…
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்…

ஆண் : நான் காதலின் கடலில்…
விழுந்துவிட்டேன்…
நீ கரம் ஒன்று கொடுத்தாய்…
எழுந்து விட்டேன்…

ஆண் : என்ன அழகு எத்தனை அழகு…
கோடி மலர் கொட்டிய அழகு…
இன்று எந்தன் கை சேர்ந்ததே…

BGM


Notes : Enna Azhagu Song Lyrics in Tamil. This Song from Love Today (1997). Song Lyrics penned by Vairamuthu. என்ன அழகு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top