| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | பி. உன்னிகிருஷ்ணன் | ஷிவா | லவ் டுடே |
Yen Pennendru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
ஏன் ஒரு பாதி சிரித்தாய்…
என் உயிர் பூவை எரித்தாய்…
ஆண் : முதல் நாள் பார்த்தாய்…
உறக்கம் கெடுத்தாய்…
முறையா என்றேன்…
கண்கள் பறித்தாய்…
ஆண் : என் வலி தீர…
ஒரு வழி என்ன…
என் பனிப் பூவே…
மீண்டும் பார்த்தால் என்ன…
ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
—BGM—
ஆண் : நீ சூடும் ஒரு பூ தந்தால்…
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்…
உன் வாயால் என் பேர் சொன்னால்…
உன் காலடியில் கிடப்பேன்…
ஆண் : தூக்கத்தை தொலைத்தேனே…
துடிக்குது நெஞ்சம்…
தலை போன சேவல் போல்…
தவிக்குது அங்கம்…
ஆண் : இரண்டில் ஒன்று சொல்லிவிடு…
இல்லை நீயே கொள்ளியிடு…
ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
—BGM—
ஆண் : நோகாமல் பிறர் காணாமல்…
உந்தன் ஆடை நுனி தொடுவேன்…
என்ன ஆனாலும் உயிர் போனாலும்…
ஒரு தென்றல் என்றே வருவேன்…
ஆண் : நீ என்னைப் பார்த்தால்தான்…
துடிக்குது உள்ளம்…
நீ என்னைப் பிரிந்தாலோ…
உள்ளம் வெறும் பள்ளம்…
ஆண் : இமயம் கேட்கும் என் துடிப்பு…
ஏனோ உனக்குள் கதவடைப்பு…
ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
ஏன் ஒரு பாதி சிரித்தாய்…
என் உயிர் பூவை எரித்தாய்…
ஆண் : முதல் நாள் பார்த்தாய்…
உறக்கம் கெடுத்தாய்…
முறையா என்றேன்…
கண்கள் பறித்தாய்…
ஆண் : என் வலி தீர…
ஒரு வழி என்ன…
என் பனிப் பூவே மீண்டும்…
பார்த்தால் என்ன…
ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
Notes : Yen Pennendru Song Lyrics in Tamil. This Song from Love Today (1997). Song Lyrics penned by Vairamuthu. ஏன் பெண்ணென்று பாடல் வரிகள்.


