என் ராத்தூக்கம் போச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்எங்க சின்ன ராசா

Enn Raathukkam Song Lyrics in Tamil


ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…

—BGM—

ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…

—BGM—

ஆண் : பாட நினைச்சேன் அப்போது…
பாட்டப் புடிச்சேன் இப்போது…
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்…
தொடக்கத்தில் இருந்துச்சு…
தொடத் தொட சரியாச்சு…

ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…

—BGM—

ஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு…
ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்…

—BGM—

ஆண் : காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே…
எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா…

—BGM—

ஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு…
ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்…
காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே…
எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா…

ஆண் : அன்னக்கிளி அல்லிக்கொடி துள்ளி குதிச்சா…
கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஏங்கி மறைச்சா…

—BGM—

ஆண் : ஏத்தி வச்ச நெய் விளக்க ஊதி அணைச்சேன்…
அவ வெக்கப்பட்டு எட்டி நிக்க வாரி அணைச்சேன்…
அட சேவக்கோழி கூவிக் கூட கும்மாளம்தான்…

—BGM—

ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…

ஆண் : பாட நினைச்சேன் அப்போது…
பாட்டப் புடிச்சேன் இப்போது…
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்…
தொடக்கத்தில் இருந்துச்சு…
தொடத் தொட சரியாச்சு…

ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…

—BGM—

ஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு…
அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா…

—BGM—

ஆண் : பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்…
ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்…

—BGM—

ஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு…
அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா…
பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்
ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்…

ஆண் : கையத்தொட்டும் காலத்தொட்டும் கெஞ்சி தவிச்சா…
அட அப்பக்கூட என் மனசு விட்டுதல்லையே…

—BGM—

ஆண் : கொக்கரிக்கும் கொண்டச்சேவல் விட்டுவிடுமா…
அந்த பெட்டக்கோழி சத்தத்துக்கு கட்டுப்படுமா…
அந்த ராகத்தில சூரப்புலி நான்தாண்டா…

ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…

ஆண் : பாட நினைச்சேன் அப்போது…
பாட்டப் புடிச்சேன் இப்போது…
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்…
தொடக்கத்தில் இருந்துச்சு…
தொடத் தொட சரியாச்சு…

ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…


Notes : Enn Raathukkam Song Lyrics in Tamil. This Song from Enga Chinna Rasa (1987). Song Lyrics penned by Vaali. என் ராத்தூக்கம் போச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading