எங்களுக்கும் குறையும் உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஸ்ரீராம் ஷர்மாவீரமணிதாசன்அரவிந்த்அம்மன் பாடல்கள்

Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil


ஆண் : பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா…
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா…
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா…
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா…

—BGM—

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…

—BGM—

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…

ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

—BGM—

ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…

—BGM—

ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…

ஆண் : சொந்தபந்தம் யாருமில்லை…
சூழும்ஜனம் நல்லதில்லை…
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை…

ஆண் : தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…

ஆண் : நீ வந்து தாயாக எனை தாங்கனும்…
உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்…
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்…
மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

—BGM—

ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…

—BGM—

ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…

ஆண் : முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒளி…
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி…
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…

ஆண் : சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே…
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே…
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே…
தில்லை காளியே… தில்லை காளியே…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…

ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…

ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
செல்லமகன் வாடலாமா…
உந்தன் செல்லமகன் வாடலாமா…


Notes : Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sriram Sharma. எங்களுக்கும் குறையும் உண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading