எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநிகில் மேத்யூ, சின்மயி, சாதனா சர்கம் & சௌமியா ராவ் ஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Enathuyirey Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

பெண் : நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்…
சேர்கிறேன் வாழும் காலமே…
வரும் நாட்களே தரும் பூக்களே…
நீளுமே காதல் காதல் வாசமே…

பெண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

—BGM—

ஆண் : இனி இரவே இல்லை கண்டேன்…
உன் விழிகளில் கிழக்கு திசை…
இனி பிரிவே இல்லை அன்பே…
உன் உளறலும் எனக்கு இசை…

பெண் : உன்னை காணும் வரையில்…
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்…
கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய்…
நல்ல ஓவியம்…
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே…
நூறு கோடி வானவில்…

ஆண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

—BGM—

பெண் : மரம் இருந்தால் அங்கே என்னை…
நான் நிழலென நிறுத்திடுவேன்…
இலை விழுந்தால் ஐயோ என்றே…
நான் இருதயம் துடித்திடுவேன்…

ஆண் : இனி மேல் நமது இதழ்கள் இணைந்து…
சிரிக்கும் ஓசை கேட்குமே…
நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம்…
துடைக்க கைகள் கோர்க்குமே…
உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே…
நீ என் வாழ்வின் மோட்சமே…

பெண் : எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே…
கடவுளை போல் நீ முளைத்தாய்…

ஆண் : நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்…
சேர்கிறேன் வாழும் காலமே…
வரும் நாட்களே தரும் பூக்களே…
நீளுமே காதல் காதல் வாசமே…

—BGM—


Notes : Enathuyirey Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. எனதுயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading