என் மாமன் மதுர வீரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுவர்ணலதாதேவாஇரணியன்

En Maman Madhura Veeran Song Lyrics in Tamil


பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…

பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…
ஏ… மாமா… மனந் தூங்குதில்ல…
உன் ஆசை அது நீங்குதில்ல…

பெண் : உன்னதான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…

BGM

பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்…
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்…
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்…
அது வளருதய்யா வயித்துக்குள்ள…

பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்…
போதும் அந்த ஒரு ஸ்பரிசம்…
மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே…
நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்…

பெண் : மாமா உம் மூச்சு பட்டு…
மொட்டு ஒன்னு பூவாச்சு…
மாமா உம் முத்தம் பட்டு…
ரத்தம் இப்ப தேனாச்சு…

பெண் : உன்னதான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…

BGM

பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே…
உதிர்ந்துபுட்ட மல்லிய பூ…
வாசம் இன்னும் வீசுதய்யா…
என் மனசுக்குள்ள மனசுக்குள்ள…

பெண் : நீ கொடுத்த முத்தத்துல…
நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க…
ஈரம் இன்னும் காயலயே…
என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள…

பெண் : கண் மூடி போகும் போதும்…
காதல் அது போகாது…
மண் மூடி போகும் போதும்…
மனசு மட்டும் மூடாது…

பெண் : உன்னைத்தான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…

பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல…
உன் ஆசை அது நீங்குதில்ல…
உன்ன தான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…

BGM


Notes : En Maman Madhura Veeran Song Lyrics in Tamil. This Song from Iraniyan (1999). Song Lyrics penned by Na. Muthukumar. என் மாமன் மதுர வீரன் பாடல் வரிகள்.


Scroll to Top