என் காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஹரிசரண்மார்க் பிரசாந்த்நீலகண்டா

En Kadhale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…
மின் மினிக்கு மின்னலே இறகுகளாய்…
மாறிவிடும் காதலும் வந்துவிட்டால்…

ஆண் : ஒட்டு மொத்த நரம்பிலும் பாயுது…
உயிரே உயிரே பருவ மின்சாரமே…

ஆண் : என் அன்பே…
உயிரே உயிரே உன்னால் உற்றாசகமே…
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…

—BGM—

ஆண் : முதல் முதல் மண்ணில் விழும் மழைத் தூளிக்குள்ளே…
அருவியின் பயணம் அது துவங்குது அன்பே…

ஆண் : வானவில்லை கைகளால் நான் தொட்டு…
வண்ணங்களை அள்ளியே பூசுகிறேன்…

ஆண் : சின்னதாய் சிரிக்கும் உன் முகம்…
ஆயிரம் பூக்களை என்னுள் வீசுதே…
என் அன்பே…
ஆடி ஆயிரம் பூக்களை என்மேல் வீசுதே…
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போதே வானிலே…

—BGM—

ஆண் : ப த னி ச படிக்கும் உன் இமைகளில் துடிக்கும்…
இருதயம் உயிரே அடி அழகிய திமிரே…
விழியாலே விண்மீன் நீ பறித்து…
என் உயிரை ஜொலித்திட வைத்தாயே…

ஆண் : நீ வரைந்த காதல் இதயம்…
அன்பே அன்பே ஓசை வீசுதே…
என் அன்பே…
நீ வரைந்த காகித இதயம் துடிக்குதே…
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…


Notes : En Kadhale Song Lyrics in Tamil. This Song from Nilakanta (2023). Song Lyrics penned by Madhurakavi. என் காதலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading