எழுந்தால் மலை போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Eluntha Mala Pola Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…
எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

ஆண் : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்…
பொன்னான மனசிருக்கும்…
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு…
எப்போதும் திறந்து இருக்கும்…

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்…
எட்டூரும் பணிஞ்சிருக்கும்…
அவர் தொட்டு தந்த நெல்லுமணி…
முப்போகம் விளைஞ்சிருக்கும்…

குழு : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

—BGM—

ஆண் : வைகை ஆறும்தான் கடல பாக்கல…
வாசுதேவர் மனம் கடலாச்சி…
குழு : எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி…

ஆண் : வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல…
வாசுதேவர் கை படகாச்சி…
குழு : எங்க வாசுதேவர் கை படகாச்சி…

ஆண் : கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு…
தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு…
குழு : நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு…

ஆண் : வீட்டுக்கு வீடு எரியுதுங்க…
வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு…
குழு : எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு…

குழு : எங்க உசுரெல்லாம் ஊடுருவும்…
உன்னோட புன்சிரிப்பு…
எங்க மனசாளும் மன்னனுக்கு…
மத்தாப்பு வரவேற்பு…

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

—BGM—

ஆண் : வில்லு வண்டியில போகும் மிடுக்குல…
வீரம் வெளையுது கழனியிலே…
குழு : அத கேட்டுப் பாருங்க வெடலைகள…

ஆண் : பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான்…
பயிசல் செய்யுது வழக்குகள…
குழு : இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல…

ஆண் : சுத்தி எரியும் எந்த நெருப்பும்…
தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை…
குழு : அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை…

ஆண் : சத்தியத்தையும் தர்மத்தையும்…
காத்திருக்கும் எங்க தர்மதுரை…
குழு : உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை…

ஆண் : இங்க நடமாடும் சூரியனை…
கும்பிட்டு பொங்க வச்சோம்…
எங்க பசி தீர்த்த தர்மனுக்கு…
பல்லாக்கு தூக்கி நிற்போம்…

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

குழு : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்…
பொன்னான மனசிருக்கும்…
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு…
எப்போதும் திறந்து இருக்கும்…

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்…
எட்டூரும் பணிஞ்சிருக்கும்…
அவர் தொட்டு தந்த நெல்லுமணி…
முப்போகம் விளைஞ்சிருக்கும்…

ஆண் : எழுந்தால் மலை போல…
குழு : எழுந்தால் மலை போல…
ஆண் : நடந்தால் நதி போல…
குழு : நடந்தால் நதி போல…


Notes : Eluntha Mala Pola Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Ilaya Kamban. எழுந்தால் மலை போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading