ஹேய் புயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல் & சத்யபிரகாஷ்அரோல் கோரெல்லிகலகத் தலைவன்

Hey Puyale Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் புயலே எனை நீ கலைப்பது ஏன்…
ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்…

பெண் : வான் மேலே நான் ஏறி…
இறகென அலைவது ஏன்…
என் பாதை நான் மாறி…
இனிமையில் தொலைவது ஏன்…

பெண் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை…
இதன் முன்னே உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை…

BGM

பெண் : ஹோ… வேகம் கூடும் காற்றில் ஆடும்…
தீவிரல் இவள்…
மேகம் சூழும் வானின் கீழே…
ஓவியம் இவள்…

ஆண் : ஒரு சில தூரல் தீயென்றாகா…
நனைகின்ற ஓவியங்கள் பூக்க…
நிறமணிந்தே உயிரெழுந்தே…
மலர்வனம் காற்றாடி குலுங்க…

பெண் : இருவிழியும் இருதயமும்…
உயிர்விழி வானும் இன்னும் விரிய…
விரிந்தனையோ விழித்தனையோ…
கீழ்மேல் என்று வாழ்க்கையினை…
மாற்றி போகும் புயலே…

ஆண் : ஹேய் புயலே எனை நீ கலைப்பது ஏன்…
ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்…

BGM

பெண் : கண்ணில் மோதி கூந்தல் கோதி…
காதல் வீசினாய்…
கைகள் மீறி மார்பில் ஏறி…
காமம் பேசினாய்…

ஆண் : முதுகினில் கால் விரல்கள் தீயாய்…
முகத்தினில் உன் இதயங்கள் நீராய்…
எரிந்திடவா நனைந்திடவா…
குழம்பத்தில் எந்தன் தேகம் திணற…

பெண் : மகிழ்ந்திடவா அழுதிடவா…
வலியினில் கோடி இன்பம் உணர…
போதுமென வேண்டுமென…
எந்தன் நெஞ்சை இரண்டாக்கி…
தூக்கி போகும் புயலே…

பெண் : ஹேய் புயலே எனை நீ கலைப்பது ஏன்…
ஆண் : ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்…

பெண் : ஹா வான் மேலே நான் ஏறி…
இறகென அலைவது ஏன்…

ஆண் : என் பாதை நான் மாறி…
இனிமையில் தொலைவது ஏன்…

ஆண் & பெண் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை…
இதன் முன்னே உன்னை எதிர்பார்த்தேன் இல்லை…

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் இல்லை…


Notes : Hey Puyale Song Lyrics in Tamil. This Song from Kalaga Thalaivan (2022). Song Lyrics penned by Madhan Karky. ஹேய் புயலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top