| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| எஸ்.ஜே. ஜனனி | எஸ்.ஜே. ஜனனி | எஸ்.ஜே. ஜனனி | ரயில் |
Elay Sevathavane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏலே செவத்தவனே…
எங்க வந்து கெடக்குரியோ…
பாலே வத்தலையே…
பச்சமண்ணு திங்குறியோ…
பெண் : பாதி வழி போகையிலே…
படலு வந்து மறச்சிடுச்சோ…
ஊதி வச்ச மூச்சு காத்து…
ஓடல விட்டு போயிடுச்சோவ்…
பெண் : பேதியில போன விதி…
பெடணி கிட்ட சிரிச்சிடுச்சோ…
வீதியில போன புள்ள…
விறகு கட்ட ஆயிருச்சோவ்…
பெண் : ஏலே செவத்தவனே…
எங்க வந்து கெடக்குரியோ…
பாலே வத்தலையே…
பச்சமண்ணு திங்குறியோ…
—BGM—
பெண் : பெசக்கான சாமியப்போ…
பேயவிட்டு அடிச்சிருக்கும்…
அசலூர்ல காத்துஇருக்கும்…
ஆத்தாளுக்கு துடிச்சிருக்கும்…
பெண் : பொனமான பொக்கிஷமே…
பொழுது கெட்டு தாய் பார்க்கும்…
கனவோடு சேதி வந்து…
கர்பப்பை கலங்கி இருக்கும்…
பெண் : ஏலே செவத்தவனே…
எங்க வந்து கெடக்குரியோ…
பாலே வத்தலையே…
பச்சமண்ணு திங்குறியோ…
—BGM—
பெண் : கடக்காலு நட்டகம்பும்…
கருவழிச்சி பார்துருச்சே…
கொடக்கூலி வாங்கணும்ன்ன…
கோட்டை இடி விழுந்துடுச்சே…
பெண் : பொடக்காலி கெணத்து குழி…
பொங்கி முழுகடிச்சிருச்சே…
வடக்கா ஓன் வயக்காட்ல…
வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே…
வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே…
வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே…
பெண் : ஏலே செவத்தவனே…
எங்க வந்து கெடக்குரியோ…
பாலே வத்தலையே…
பச்சமண்ணு திங்குறியோ…
—BGM—
Notes : Elay Sevathavane Song Lyrics in Tamil. This Song from Rail (2024). Song Lyrics penned by S. J. Jananiy. ஏலே செவத்தவனே பாடல் வரிகள்.
