எதுக்குபுள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன்ராஜன்அந்தோனி தாசன்அந்தோனி தாசன்சோனி மியூசிக் சௌத்

Edhukku Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…

ஆண் : அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…

BGM

ஆண் : சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா…
பித்துக்குளி ஆகிப்புட அதனாலா…
பொத்தி பொத்தி உன்ன வச்சேன் அதனாலா…
பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா…

ஆண் : என் கண்ணுக்குள்ள நான் கனவா சேர்த்துவச்சதை…
அத கன்னிராகத்தான் சிந்துறேன் பார்த்து நிக்கிற…
நீ என் உசுரைவிட ஒசத்தியடி உனக்கு புரியல…

ஆண் : அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…

BGM

ஆண் : முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா…
என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா…
தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா…
ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா…

ஆண் : அந்த ஆத்தாங்கரையில நுரையா நானும் இருப்பேன்டி…
நீ காப்பாத்தலேன்னா காத்தா மறஞ்சுபோவேண்டி…
இது எப்போ உனக்கு புரியுமடி எனக்கு தெரியல…

ஆண் : அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…

BGM

ஆண் : உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா…
உன்னால வேகுறேண்டி புரியாதா…
உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா…
என்னை நீ ஏறெடுக்க கூடாதா…

ஆண் : என் மூச்சுக்காத்துல முழுசா நீ தன் இருக்குற…
என் நெஞ்சக்கொளுத்திதான் அதுல தீய மிதிக்கிற…
ஒரு நடைபொணமா இருக்குறேன்டி எதுவும் புடிக்கல…

ஆண் : அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…

BGM


Notes : Edhukku Pulla Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2019). Song Lyrics penned by Mohanrajan. எதுக்குபுள்ள பாடல் வரிகள்.


Scroll to Top