தேசிங்கு ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாடும் டும் டும்

Desingu Raja Song Lyrics in Tamil


பெண் : தேசிங்கு ராஜா… தேசிங்கு ராஜா…

—BGM—

குழு : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹை…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹை…

பெண் : தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…

ஆண் : தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…

பெண் : பூவா தலையா போட்டு பார்த்தால்…
பூவொன்னு விழுந்தது தலையிலே…

ஆண் : காயா பழமா கேட்டுப் பார்த்தால்…
காயொன்னு கனிஞ்சது கனவிலே…

பெண் & ஆண் : இனி ஒன்னும் ஒன்னும்…
ஒன்னா சேர்ந்து மூனா ஆயிடும்…

பெண் : ஹே… தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…

ஆண் : தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…

—BGM—

பெண் : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே… ஓ…
நெனப்புக்கு அளவில்லே…

ஆண் : கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே… ஓ…
கனவுக்கு விலை இல்லே…

பெண் : என் மனதில் பாய் மரங்கள் விரியும்…
இந்த கப்பல் எட்டு திசை அடையும்…

ஆண் : என் இதயம் மும்மடங்கு துடிக்கும்…
உன் மனதின் பாரம் எண்ணி கனக்கும்…

பெண் : வினா வினை கேட்டேன்…
விடை வருமே தானாய்…

—BGM—

ஆண் : ஆடு புலி ஆட்டத்திலே… ஓ…
ஓடும் புலி கட்டத்திலே…

பெண் : ஓட்டைப்பானை திட்டத்தாலே… ஓ…
வழியுதே கூட்டத்திலே…

ஆண் : என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்…
பெண் : அது இருப்பு பாதை விட்டு விலகும்…

ஆண் : தளைகிளை திரும்பியிடும் இது சரியா…
பெண் : திரிசங்கு சொர்க்க நிலை இதுதானா…

ஆண் : வினா கேட்டேன்…
விடை வருமே தானாய்…

பெண் : தேசிங்கு ராஜா… தேசிங்கு ராஜா… ஹேய்…
சின்ன பொண்ணு சிரிச்சா…
நட்சத்திரம் பறிச்சா…
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டனும்…

ஆண் : சுண்டைக்காயி எட்டனா…
சுமைகூலி பத்தனா…
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்…

பெண் : சும்மா ஆடாதே…
சோழியன் குடுமி…
எத்தன பவுன் வேணும் வாங்கிக…

ஆண் : குல்லா போடாதே…
மாப்பிள்ளை முறுக்கு…
ஜில்லாவுல பாதிதான் பிரிக்கணும்…

பெண் & ஆண் : இனி ஒன்னும் ஒன்னும்…
ஒன்னா சேர்ந்து மூனா ஆயிடும்…

பெண் : ஹே… தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…

ஆண் : தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…

—BGM—


Notes : Desingu Raja Song Lyrics in Tamil. This Song from Dum Dum Dum (2001). Song Lyrics penned by Na Muthukumar. தேசிங்கு ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading