சின்னஞ்சிறு நிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்ஹரிசரண்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Chinnanjiru Nilave Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி…
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல்யானே…

ஆண் : யாங்குனைத் தேடுவலும் அன்னமே ஏதினி செய்குவனோ…
ஓங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி…

—BGM—

ஆண் : துள்ளும் நயனமெங்கே…
வெள்ளம்போல் சொல்லும் மொழிகள் எங்கே…
கன்னல் சிரிப்புமெங்கே…
என்னை சேர் ஆரண மார்புமெங்கே…

ஆண் : மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே…
கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தீண்டிடும் பார்வையெங்கே…

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…

—BGM—

ஆண் : கானகம் எரியுதடி…
வஞ்சியே ஞாலமும் நழுவுதடி…
வானம் உடைந்ததடி…
அழகே பூமியும் சரிந்ததடி…

ஆண் : கொல்லை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீந்தினியோ…
எற்றடி கொற்றமுற்றே பிரிவை சாபமாய் தந்தனையோ…

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…

ஆண் : அர்த்தம் அழிந்ததடி…
அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி…
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி…
சகியே யாதினி கோல்யானே…


Notes : Chinnanjiru Nilave Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan – 2 (2023). Song Lyrics penned by Ilango Krishnan. சின்னஞ்சிறு நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading