சின்ன கபாலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷங்கர் மகாதேவன், நவீன் & அருண் காமராஜ்எஸ்.எஸ். தமன்சிவலிங்கா

Chinna Kabali Song Lyrics in Tamil


ஆண் : அல்லுவுட்டா அப்பீட்டு…
தில்லுருந்தா ரிப்பீட்டு…
டல்லடிக்கும் நேரத்தில மச்சான் நிப்பாட்டு…

ஆண் : அள்ளிவிட்டா கெட்டிட்டு…
தள்ளிவிட்டா டிக்கெட்டு…
ஜொல்லுவிட்டா மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு…

ஆண் : கில்லிக்குத்தான் சல்யூட்டு…
சொல்லியடி ரொட்டேட்டு…
பாரபட்சம் பாக்க மாட்டான் சின்ன கபாலி…

—BGM—

ஆண் : சின்ன கபாலி…

—BGM—

ஆண் : ஹே பாட்டாளி பாட்டாளி…
ஏழைக்கெல்லாம் கூட்டாளி…
வெள்ளமனம் உள்ளவன்டா சின்ன கபாலி…

ஆண் : சமாளி சமாளி…
தில்லிருந்தா சமாளி…
வந்து நின்னா அந்த இடம் டபுள் தீபாவளி…

ஆண் : பழகுனா உருகுவேன்…
பாசத்துக்கு கலங்குவேன்…
பகைய வளக்க வேணாம் பங்காளி…

ஆண் : ஒடம்புதான் கறுப்புடா…
ஒரசிப்பாரு நெருப்புடா…
அஞ்ச மாட்டான் சின்ன கபாலி…

ஆண் : ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து…
குத்திடலாமா…
ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து…
ஆடிடலாமா…

ஆண் : ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து…
குத்திடலாமா…
ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து…
ஆடிடலாமா…

ஆண் : ஹே பாட்டாளி பாட்டாளி…
ஏழைக்கெல்லாம் கூட்டாளி…
வெள்ளமனம் உள்ளவன்டா சின்ன கபாலி…

ஆண் : சமாளி சமாளி…
தில்லிருந்தா சமாளி…
வந்து நின்னா அந்த இடம் டபுள் தீபாவளி…

—BGM—

ஆண் : தெரசா போல் ஆயுள் எல்லாம்…
தியாகியாக வாழவேண்டாம்…
சிறுசா ஓர் ஓரத்துல சேவை செய்யடா…

ஆண் : பாரிபோல் வாரித்தர பட்ஜெட் அங்க பத்தலன்னா…
பசி ஆறும் இடம் எங்க காட்டிவிடுடா…

ஆண் : சிறு ரொக்கம் குடுத்ததும்…
ஒரு பக்க விளம்பரம்…
நாளிதழில் நீயும் தராதே…

ஆண் : ஏழைகளின் கண்ணோரம் பார்க்கின்ற சந்தோஷம்…
போல ஒரு இன்பம் வராதே…

ஆண் : ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து…
குத்திடலாமா…
ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து…
ஆடிடலாமா…

ஆண் : ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து…
குத்திடலாமா…
ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து…
ஆடிடலாமா…

ஆண் : ஹே பாட்டாளி பாட்டாளி…
ஏழைக்கெல்லாம் கூட்டாளி…
வெள்ளமனம் உள்ளவன்டா சின்ன கபாலி…

ஆண் : சமாளி சமாளி…
தில்லிருந்தா சமாளி…
வந்து நின்னா அந்த இடம் டபுள் தீபாவளி…

—BGM—

ஆண் : அல்லுவுட்டா அப்பீட்டு…
தில்லுருந்தா ரிப்பீட்டு…
டல்லடிக்கும் நேரத்தில மச்சான் நிப்பாட்டு…

ஆண் : அள்ளிவிட்டா கெட்டிட்டு…
தள்ளிவிட்டா டிக்கெட்டு…
ஜொல்லுவிட்டா மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு…

—BGM—

ஆண் : உன் வீட்டு கேட்டைத்தாண்ட…
நூறு முறை யோசிச்சுட்டு…
பில்கேட்சு ஆகலன்னு ஃபீலிங் ஆகாதே…

ஆண் : பால்கோவா கடிக்கவே பல்செட்டு வேணுமுன்னா…
பர்ஃபிய வாங்கி வீட்டில் சேத்து வெக்காதே…

ஆண் : இறைக்காத கிணறெல்லாம் சொரக்காது சொல்வாங்க…
உதவின்னா ஓடு முன்னாடி…
நீ என்ன வளக்குற நான் அன்ப கொடுக்குறேன்…
அதுதான்டா சின்ன கபாலி…

ஆண் : ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து…
குத்திடலாமா…
ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து…
ஆடிடலாமா…

ஆண் : ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து…
குத்திடலாமா…
ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து…
ஆடிடலாமா…

ஆண் : ஹே பாட்டாளி பாட்டாளி…
ஏழைக்கெல்லாம் கூட்டாளி…
வெள்ளமனம் உள்ளவன்டா சின்ன கபாலி…

ஆண் : சமாளி சமாளி…
தில்லிருந்தா சமாளி…
வந்து நின்னா அந்த இடம் டபுள் தீபாவளி…

ஆண் : சின்ன கபாலி…


Notes : Chinna Kabali Song Lyrics in Tamil. This Song from Sivalinga (2017). Song Lyrics penned by Viveka. சின்ன கபாலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading