சந்திரனை தொட்டது யாா்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதாஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Chandiranai Thottathu Yaar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…

ஆண் : கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…

பெண் : சந்திரனை தொட்டது யாா் நீதானா…
அட நீதானா…
சத்தியமாய் தொட்டவனும் நீதானா…
அது நீதானா…

பெண் : நெருங்கி தொட்டவனே…
நிலவு நான்தானா…
உன் நிலவு நான்தானா…
உன் நிலவு நான்தானா…

—BGM—

ஆண் : ஹே… பூக்களை செடிகொடியின்…
பொருளென்று நினைத்திருந்தேன்…

ஆண் : ஓ… பூக்களை செடிகொடியின்…
பொருளென்று நினைத்திருந்தேன்…
பூவை உன்னைப் பாா்த்த பின்னே…
பூக்களின் மொழியறிந்தேன்…

பெண் : ஓ… தலையணை என்பதெல்லாம்…
தலைக்கென்று நினைத்திருந்தேன்…
தலைவனைப் பிாிகையிலே…
தலையணைத் துணையறிந்தேன்…

ஆண் : தீப்பந்தம் போன்றவன் நான்…
தீபமென்று ஆகிவிட்டேன்

பெண் : புயலுக்கு பிறந்தவள் நான்…
தென்றலென்று மாறிவிட்டேன்…

ஆண் : கருங்கல்லைப் போன்றவன் நான்…
கற்பூரம் ஆகிவிட்டேன்…
சந்திரனை…

ஆண் : சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…

ஆண் : கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…

—BGM—

ஆண் : தாமரை மலா்கொண்டு…
உடல் செய்த ஓவியமே…
என்னுடல் பாரம் மட்டும்…
எந்த விதம் தாங்குகிறாய்…

பெண் : மீன்களை சுமப்பதொன்றும்…
நீருக்கு பாரமில்லை…
காதலை சுமக்கையிலே…
காதலரும் பாரமில்லை…

ஆண் : சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம்…
தா்க்கத்திற்க்கு நேரமில்லை…

பெண் : முத்தங்கள் நீ வழங்கு…
இதழுக்கு நேரமில்லை…

ஆண் : தொடங்குதல் மிக எளிது…
முடிப்பதுதான் பொிய தொல்லை…

பெண் : சந்திரனே…

ஆண் : சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…

ஆண் : கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…


Notes : Chandiranai Thottathu Yaar Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. சந்திரனை தொட்டது யாா் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading