Category Archives: தாஸ்

sakka-podu-pottane-song-lyrics-in-tamil

சக்க போடு போட்டானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகே கே & சாதனா சர்கம்யுவன் சங்கர் ராஜாதாஸ்

Sakka Podu Pottane Song Lyrics in Tamil


BGM

பெண் : சக்க போடு போட்டானே…
சவுக்கு கண்ணால…
சத்தியமா பாக்கல…
இதுக்கு முன்னால…

பெண் : தாங்கதான் முடியல…
ஐயோ என்னால…
என் தாவணி நழுவுது…
கீழே தன்னால…

ஆண் : சக்க போடு போட்டாலே…
சவுக்கு கண்ணால…
சத்தியமா பாக்கல…
இதுக்கு முன்னால…

ஆண் : தாங்க தான் முடியல…
ஐயோ என்னால…
என் தாகம்தான் கூடுது…
இந்த பொன்னால…

BGM

ஆண் : கொண்டையில பூவடுக்கி…
கும்முன்னுதான் பேசுற…
கெண்டக்கால நீவுற…
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே…
கிறுக்கு புடிக்க வெக்குற…

பெண் : அஞ்சு நொடி நேரத்தில…
கோடி முறை பாக்குற…
மீனுக்குஞ்சு போல துள்ளி…
ஐசாலக்கடி காட்டுற…

ஆண் : எச்சி தொட்டு கச்சிதமா…
உன்னை என்னை ஒட்டிக்கலாம்…

பெண் : முத்தம் வச்சு முத்தம் வச்சு…
மூச்சு முட்ட கட்டிக்கலாம்…

ஆண் : கொழுத்து போன பொம்பள…
இடுப்ப கொண்டாடி…

பெண் : யே… கொஞ்சம் நானும் ஓடினா…
தவிப்ப திண்டாடி…

BGM

பெண் : உள்ளங்கள சேர்த்து வச்சு…
ஊருக்காக வாழுற…
பம்பரமா ஓடுற…
உன்னை எண்ணி ஏங்குறேனே…
என்ன செய்ய போகுற…

ஆண் : உள்ளங்கையில் தூக்கி வச்சு…
உத்து உத்து பார்க்கவா…
உருட்டி கீழ தள்ளி…
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா…

பெண் : ஒத்த சொல்லு சொன்னதில…
பத்திக்கிச்சு என் மனசு…

ஆண் : மத்தபடி கன்னத்துல…
முத்த கத நீ எழுது…

பெண் : வடிச்ச சோறு போலத்தான்…
ஆவி பறக்குற…

ஆண் : ஹே… மடிச்ச சேலை கலைக்கதான்…
கூவி அழைக்கிறேன்…

பெண் : சக்க போடு போட்டானே…
சவுக்கு கண்ணால…
சத்தியமா பாக்கல…
இதுக்கு முன்னால…

ஆண் : தாங்க தான் முடியல…
ஐயோ என்னால…
என் தாகம்தான் கூடுது…
இந்த பொன்னால…


Notes :  Sakka Podu Pottane Song Lyrics in Tamil. This Song from Daas (2005). Song Lyrics penned by Viveka. சக்க போடு போட்டானே பாடல் வரிகள்.


சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்யுவன் சங்கர் ராஜாதாஸ்

Saami Kittay Song Lyrics in Tamil


பெண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சிகிட்டேன்…

பெண் : ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு…
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு…
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்…

பெண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சிகிட்டேன்…

பெண் : ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு…
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு…
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்…

பெண் : ஒரு கோடி புள்ளி வச்ச…
நான் போட்ட காதல் கோலம்…
ஒரு பாதி முடியும் முன்ன…
அழிச்சிருச்சு காலம் காலம்…

பெண் : இன்னொரு ஜென்மம்…
நான் மறுபடி பொறந்து வந்து…
உனக்காகக் காத்திருப்பேன்…

பெண் : அப்பவும் சேராமல்…
இருவரும் பிரியனும்னா…
பொறக்காமல் போயிடுவேன்…

பெண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…

பெண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சிகிட்டேன்…

பெண் : ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு…
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு…
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்…

BGM

பெண் : தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி…
கல் எறிஞ்சா கலையும் கலையும்…
நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல்…
எந்த நெருப்பில் எரியும் எரியும்…

பெண் : நீ போன பாத மேல…
சருக்காக கடந்த சுகமா…
உன்னோட ஞாபகம் எல்லாம்…
மனசுக்குள்ள இருக்கும் ரனமா…

பெண் : கட்டுக் காவல் மீறி வர…
காதல் நெஞ்சு கெஞ்சுதே…

ஆண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சிகிட்டேன்…

ஆண் : ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு…
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு…
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்…

BGM

ஆண் : மனசுக்குள்ள பூட்டி மறச்ச…
அப்போ எதுக்கு வெளியில சிரிச்ச…
கனவுக்குள்ள ஓடி புடிச்ச…
நெசத்துல தான் தயங்கி நடிச்ச…

ஆண் : அடி போடி பயந்தாங்கோலி…
எதுக்காக ஊமை ஜாடை…
நீ இருந்த மனச அள்ளி…
எந்த தீயில் நானும் போட…

ஆண் : உன்னை என்னை கேட்டுக்கிட்டா…
காதல் நெஞ்ச தட்டிச்சு…

ஆண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சிகிட்டேன்…

ஆண் : ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு…
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு…
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்…

பெண் : சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…


Notes : Saami Kittay Song Lyrics in Tamil. This Song from Daas (2005). Song Lyrics penned by Pa. Vijay. சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் பாடல் வரிகள்.