Category Archives: அழகிய தீயே

sandana-poongatrae-song-lyrics-in-tamil

சந்தன பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரமேஷ் விநாயகம் & லாவண்யாரமேஷ் விநாயகம்அழகிய தீயே

Sandana Poongatrae Song Lyrics in Tamil


பெண் : சந்தன பூங்காற்றே…
சந்தன பூங்காற்றே…
என் இளமையின் கனவினை…
திமிர் என உரைத்தது யார்…

பெண் : என் சரிகம சிரிப்பினை…
சிறையிட நெய்தது யார்…
நான் எல்லை தாண்டி விட வில்லை…
கூண்டுக்குள்ளும் இல்லை…

பெண் : பூ போலே பிறந்து…
நதி போல துள்ளி திரிந்து…
தினம் தென்றல் போலே…
வாழ்ந்தால் ஆனந்தம்… ம்ம்ம்…

பெண் : தம் தம் தம் ன ன தம்…
தம் ன ன நம்த நம்த நன தம்…
ன ன தம் தம் நம் ன ன தம்…
ன ன தம் தம் தம்…

BGM

பெண் : எனக்கொரு ஆசை…
உனக்கொரு ஆசை…
உதடுக்குதடு புது புது பாஷை…
குற்றம் என்றே இதை சொல்வாரோ…

ஆண் : மலைகள் வேறு…
கரைகள் வேறு…
கூண்டுகள் வேறு…
கூடுகள் வேறு…
ரெண்டும் ஒன்றே என்று சொல்வாரோ…

பெண் : புரியும் வரைதான்…
மனதின் மயக்கம்…
சரியா தவறா…
என்று ஏங்காதே…

ஆண் : தவறே ஒரு நாள்…
சரியாய் தெரியும்…
வாழ்க்கை இதுதான்…
அலைபாயாதே…

பெண் : வாழ்க்கை என்னும் உலகு…
அது மாறு பட்ட அழகு…
பொன் வானின் அளவு…
என் அந்தரங்க கனவு…

பெண் : சந்தன பூங்காற்றே…
சந்தன பூங்காற்றே…
என் இளமையின் கனவினை…
திமிர் என உரைத்தது யார்…

பெண் : என் சரிகம சிரிப்பினை…
சிறையிட நெய்தது யார்…

BGM

ஆண் : பனி விழும் பார்வை…
பரம்பரை நாணம்…
தணிந்திடும் கோவம்…
திருமண ஆசை…
பெண்ணில் எல்லாம்…
எதை பார்த்தேனே…

பெண் : இலக்கணம் இல்ல…
இலக்கியம் நானே…
விழிகளுக்கெல்லாம் அதிசயம் ஆனேன்…
மௌனத்தின் நான் இசை கேட்பேனே…

ஆண் : உறவில் கலந்து…
கருவை சுமந்து…
உயிரை படைக்கும்…
பெண்கள் தெய்வங்களே…

பெண் : கோவிலும் வேண்டாம்…
சிறைகளும் வேண்டாம்…
பெண்ணை பெண்ணாய்…
கொஞ்சம் பாருங்களேன்…

ஆண் : ஓர் நாளே இருக்கும்…
சில பூவை வண்டு மணக்கும்…
உள்ளங்கள் கலந்தால்… இங்கு
வாழ்வில் அர்த்தம் இருக்கும்…

ஆண் : சந்தன பூங்காற்றே…
சந்தன பூங்காற்றே…
நான் இயக்கிட வந்தது…
திரை பட உலகத்திலே…

ஆண் : நான் எழுதிய திரை கதை…
ஜெயித்தது நிஜத்தினிலே…
ஒரு பொய்யில் வெற்றி அடைந்தாலும்…
கண்ணில் இல்லை தூக்கம்…

ஆண் : என் பாதை சரியா…
இது காலம் செய்த பிழையா…
என் நெஞ்சம் எங்கும் ஏதோ ஆதங்கம்…

ஆண் : என் பாதை சரியா…
இது காலம் செய்த பிழையா…
என் நெஞ்சம் எங்கும் ஏதோ ஆதங்கம்…


Notes : Sandana Poongatrae Song Lyrics in Tamil. This Song from Azhagiya Theeye (2004). Song Lyrics penned by . சந்தன பூங்காற்றே பாடல் வரிகள்.


விழிகளின் அருகினில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரமேஷ் விநாயகம்ரமேஷ் விநாயகம்அழகிய தீயே

Vizhigalin Aruginil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும்…
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்…
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்…
இது அதிசய அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : பெண்ணை சந்தித்தேன்…
அவள் நட்பை யாசித்தேன்…
அவள் பண்பை நேசித்தேன்…
வேறென்ன நான் சொல்ல… ஓ… யே…

BGM

ஆண் : பூ போன்ற கன்னித் தேன்…
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்…
அது ஏன் என்று யோசித்தேன்…
அடடா நான் எங்கு சுவாசித்தேன்…

ஆண் : காத்தோடு மெளனங்கள்…
இசை வார்க்கின்ற நேரங்கள்…
பசி நீர் தூக்கம் இல்லாமல்…
உயிர் வாழ்கின்ற மாயங்கள்…

ஆண் : அலைகடலாய் இருந்த மனம்…
துளி துளியாய் சிதறியதே…
ஐம்புலனும் என் மனமும்…
எனக்கெதிராய் செயல்படுதே…

ஆண் : விழி காண முடியாத மாற்றம்…
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்…
ஒரு மெளன புயல் வீசுதே…
அதில் மனம் தட்டு தடுமாறும்… ஓ… யே…

BGM

ஆண் : கேட்காத ஓசைகள்…
இதழ் தாண்டாத வார்த்தைகள்…
இமை ஆடாத பார்வைகள்…
இவை நான் கொண்ட மாற்றங்கள்…

ஆண் : சொல் என்னும் ஓர் நெஞ்சம்…
எனை நில் என்னும் ஓர் நெஞ்சம்…
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்…
ஒரு போர்க்காலம் ஆரம்பம்…

ஆண் : இருதயமே துடிக்கிறதா…
துடிப்பது போல் நடிக்கிறதா…
உரைத்திடவா… மறைத்திடவா…
ரகசியமாய் தவித்திடவா…

ஆண் : ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்…
எனை கத்தி இல்லாமல் கொய்யும்…
இதில் மீள வழி உள்ளதே…
இருப்பினும் உள்ளம் விரும்பாது… ஓ… யே…

BGM

ஆண் : விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும்…
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்…
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்…
இது அதிசய அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : பெண்ணை சந்தித்தேன்…
அவள் நட்பை யாசித்தேன்…
அவள் பண்பை நேசித்தேன்…
வேறென்ன நான் சொல்ல… ஓ… யே…

BGM


Notes : Vizhigalin Aruginil Song Lyrics in Tamil. This Song from Azhagiya Theeye (2004). Song Lyrics penned by Vairamuthu. விழிகளின் அருகினில் பாடல் வரிகள்.