Category Archives: பாண்டவர் பூமி

பாண்டவர் பூமி – Pandavar Bhoomi (2001)

அவரவர் வாழ்க்கையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பரத்வாஜ்பரத்வாஜ்பாண்டவர் பூமி

Avaravar Vaazhkaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…

ஆண் : அது ஒரு அழகிய நிலா காலம்…
கனவினில் தினம் தினம் உலா போகும்…
அது ஒரு அழகிய நிலா காலம்…
கனவினில் தினம் தினம் உலா போகும்…
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே…
அது ஒரு பொற்காலம்…

ஆண் : அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…

BGM

ஆண் : காற்றும் கூட எங்களுடன்…
இரவினில் தூங்க இடம் கேட்கும்…
மழைதுளி கூட என் தாயின்…
மடியினில் தவழ தினம் ஏங்கும்…

ஆண் : நத்தை கூட்டின் நீர் போதும்…
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்…
கத்தும் கடலும் கை கட்ட…
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்…

பெண் : தாயின் மடியில் தினம் இருந்து…
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்…
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து…
சிறு சிறு சுகமாய் தினம் சிரிப்போம்…

ஆண் : ஐந்தெழுத்து புது மொழியை…
அறிய வைத்தாள் என் அன்னை…
அண்ணன் தங்கை இருவருமே…
நேசம் கொண்டு தமிழ் மண்ணை…
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே…
அது ஒரு பொற்காலம்…

ஆண் : அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…

BGM

ஆண் : அன்னை ஊட்டிய பிடி சோற்றில்…
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்…
ஒற்றை கண்ணில் அடிபட்டால்…
பத்து கண்ணிலும் வலி கண்டோம்…

BGM

ஆண் : பள்ளிகூடம் தந்ததில்லை…
பாசம் என்னும் நூல் ஒன்றை…
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை…
எங்கள் கதை போல் வேறொன்றை…

பெண் : கண்களும் நீர் துளி கண்டதில்லை…
அழுதிட அவைகளும் பழகவில்லை…
கருப்பா சிவப்பா தெரியவில்லை…
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை…

ஆண் : சேகரித்து வைப்பதற்கு தேவை என்று எதுவும் இல்லை…
இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை…
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே…
அது ஒரு பொற்காலம்…

ஆண் : அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…

ஆண் : அது ஒரு அழகிய நிலா காலம்…
கனவினில் தினம் தினம் உலா போகும்…
அது ஒரு அழகிய நிலா காலம்…
கனவினில் தினம் தினம் உலா போகும்…
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே…
அது ஒரு பொற்காலம்…

BGM


Notes : Avaravar Vaazhkaiyil Song Lyrics in Tamil. This Song from Pandavar Bhoomi (2001). Song Lyrics penned by Snehan. அவரவர் வாழ்க்கையில் பாடல் வரிகள்.


தோழா தோழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சித்ரா சிவராமன் & யுகேந்திரன்பரத்வாஜ்பாண்டவர் பூமி

Thozha Thozha Song Lyrics in Tamil


BGM

பெண் : தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்…
உன்ன நான் புரிஞ்சுக்கணும்…
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்…

பெண் : ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா…
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா…

BGM

பெண் : நட்புக்குள் பொய்கள் கிடையாது…
நட்புக்குள் தவறுகள் நடக்காது…
நட்புக்குள் தன்னலம் இருக்காது…
நட்புக்கு ஆண் பெண் தெரியாது…
நட்பு என்னும் நூல் எடுத்து…
பூமியை கட்டி நீ நிறுத்து…

பெண் : நட்பு நட்புதான் காதல் காதல்தான்…
காதல் மாறலாம் நட்பு மாறுமா…

ஆண் : காதல் ஒன்றும் தவறே இல்லை…
காதல் இன்றி மனிதனும் இல்லை…
நண்பர்களும் காதலர் ஆக…
மாறியப்பின் சொல்லிய உண்மை…

பெண் : நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா…
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா…

பெண் : தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…

BGM

ஆண் : நீயும் நானும் வெகு நேரம்…
மனம் விட்டு பேசி சிரித்தாலும்…
பிரியும் பொழுதில் சில நொடிகள்…
மௌனம் கொள்வது ஏன் தோழி…

ஆண் : புரிதலில் காதல் இல்லையடி…
பிரிதலில் காதல் சொல்லுமடி…
காதல் காதல்தான் நட்பு நட்புதான்…
நட்பின் வழியிலே காதல் வளருமே…

பெண் : பிரிந்து போன நட்பினை கேட்டால்…
பசுமையாக கதைகளை சொல்லும்…
பிரியமான காதலும் கூட…
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்…

ஆண் : ஆணும் பெண்ணும்…
காதல் இல்லாமல் பழகிக்கலாம்…
பெண் : ஆன்… இது கரெக்ட்…

ஆண் : அது ஆயுள் முழுதும்…
கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்…

பெண் : தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்…

ஆண் : உன்ன நான் புரிஞ்சுக்கணும்…
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்…

பெண் : ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்…
அது ஆயுள் முழுதும் கலங்கப்படாம பார்த்துக்கலாம்…

BGM


Notes : Thozha Thozha Song Lyrics in Tamil. This Song from Pandavar Bhoomi (2001). Song Lyrics penned by Snehan. தோழா தோழா பாடல் வரிகள்.