தோழா தோழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சித்ரா சிவராமன் & யுகேந்திரன்பரத்வாஜ்பாண்டவர் பூமி

Thozha Thozha Song Lyrics in Tamil


BGM

பெண் : தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்…
உன்ன நான் புரிஞ்சுக்கணும்…
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்…

பெண் : ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா…
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நட்புக்குள் பொய்கள் கிடையாது…
நட்புக்குள் தவறுகள் நடக்காது…
நட்புக்குள் தன்னலம் இருக்காது…
நட்புக்கு ஆண் பெண் தெரியாது…
நட்பு என்னும் நூல் எடுத்து…
பூமியை கட்டி நீ நிறுத்து…

பெண் : நட்பு நட்புதான் காதல் காதல்தான்…
காதல் மாறலாம் நட்பு மாறுமா…

ஆண் : காதல் ஒன்றும் தவறே இல்லை…
காதல் இன்றி மனிதனும் இல்லை…
நண்பர்களும் காதலர் ஆக…
மாறியப்பின் சொல்லிய உண்மை…

பெண் : நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா…
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா…

பெண் : தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…

BGM

ஆண் : நீயும் நானும் வெகு நேரம்…
மனம் விட்டு பேசி சிரித்தாலும்…
பிரியும் பொழுதில் சில நொடிகள்…
மௌனம் கொள்வது ஏன் தோழி…

ஆண் : புரிதலில் காதல் இல்லையடி…
பிரிதலில் காதல் சொல்லுமடி…
காதல் காதல்தான் நட்பு நட்புதான்…
நட்பின் வழியிலே காதல் வளருமே…

பெண் : பிரிந்து போன நட்பினை கேட்டால்…
பசுமையாக கதைகளை சொல்லும்…
பிரியமான காதலும் கூட…
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்…

ஆண் : ஆணும் பெண்ணும்…
காதல் இல்லாமல் பழகிக்கலாம்…
பெண் : ஆன்… இது கரெக்ட்…

ஆண் : அது ஆயுள் முழுதும்…
கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்…

பெண் : தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்…

ஆண் : உன்ன நான் புரிஞ்சுக்கணும்…
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்…

பெண் : ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்…
அது ஆயுள் முழுதும் கலங்கப்படாம பார்த்துக்கலாம்…

BGM


Notes : Thozha Thozha Song Lyrics in Tamil. This Song from Pandavar Bhoomi (2001). Song Lyrics penned by Snehan. தோழா தோழா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading