Category Archives: உழவன்

உழவன் – Uzhavan (1993)

பெண்ணல்ல பெண்ணல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கதிர்எஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்உழவன்

Pennalla Pennalla Song Lyrics in Tamil


ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…

BGM

ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…

ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ…
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ…
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ…
மணக்கும் சந்தனப்பூ…

ஆண் : சித்திர மேனி தாழம்பூ…
சேலை அணியும் ஜாதிப்பூ…
சிற்றிடை மீது வாழைப்பூ…
ஜொலிக்கும் செண்பகப்பூ…

ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…

BGM

ஆண் : தென்றலைப் போல நடப்பவள்…
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்…
செந்தமிழ் நாட்டு திருமகள்…
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்…

ஆண் : சிந்தையில் தாவும் பூங்கிளி…
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி…
அஞ்சுகம் போல இருப்பவள்…
கொட்டும் அருவி போல சிரிப்பவள்…

ஆண் : மெல்லிய தாமரை காலெடுத்து…
நடையை பழகும் பூந்தேரு…
மெட்டியை காலில் நான் மாட்ட…
மயங்கும் பூங்கொடி…

ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…

ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ…
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ…
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ…
மணக்கும் சந்தனப்பூ…

ஆண் : சித்திர மேனி தாழம்பூ…
சேலை அணியும் ஜாதிப்பூ…
சிற்றிடை மீது வாழைப்பூ…
ஜொலிக்கும் செண்பகப்பூ…

ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…

BGM

ஆண் : சித்திரை மாத நிலவொளி…
அவள் சில்லென தீண்டும் பனித்துளி…
கொஞ்சிடும் பாத கொலுசுகள்…
அவை கொட்டிடும் காதல் முரசுகள்…

ஆண் : பழத்தைப் போல இருப்பவள்…
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்…
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்…
அதில் மன்மத ராகம் படிப்பவள்…

ஆண் : உச்சியில் வாசனைப் பூமுடித்து…
உலவும் அழகு பூந்தோட்டம்…
மெத்தையில் நானும் சீராட்ட…
பிறந்த மோகனம்…

ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…

ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ…
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ…
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ…
மணக்கும் சந்தனப்பூ…

ஆண் : சித்திர மேனி தாழம்பூ…
சேலை அணியும் ஜாதிப்பூ…
சிற்றிடை மீது வாழைப்பூ…
ஜொலிக்கும் செண்பகப்பூ…

ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ… ஹா ஹா…


Notes : Pennalla Pennalla Song Lyrics in Tamil. This Song from Uzhavan (1993). Song Lyrics penned by Kathir. பெண்ணல்ல பெண்ணல்ல பாடல் வரிகள்.


ராக்கோழி ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கதிர்கே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்உழவன்

Raa Kozhi Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

BGM

பெண் : ஒரு நாள் பார்க்குமா புது நாத்தோடு தேனு…
தென்காற்று தெம்மாங்கு பாட…

ஆண் : இன்னும் நாளாகுமா சின்ன ஆவாரம்பூ…
தேன் வேண்டும் வண்டோடு கூட…

பெண் : இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது…
பின்பு வாராது இள வயது…
மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்…
இது தோதான ஏகாந்த இரவு…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

BGM

ஆண் : ஒரு மாந்தோப்புத்தான் சிறு மாராப்பு போட்டு…
ஆளாகி நாளாகி ஏங்க…

பெண் : ஒரு மாமாங்கமா சின்ன மாமாவைத் தேடி…
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க…

ஆண் : அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும்…
இன்று தீர்க்கின்ற பொழுதல்லவா…

ஆண் : கட்டிக் கொண்டால் என்ன…
ஒட்டி நின்றால் என்ன…
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது…

பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

ஆண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் & பெண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

ஆண் & பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…


Notes : Raa Kozhi Rendu Song Lyrics in Tamil. This Song from Uzhavan (1993). Song Lyrics penned by Kathir. ராக்கோழி ரெண்டும் பாடல் வரிகள்.