Category Archives: கேப்டன் பிரபாகரன்

Pasamulla Pandiyaru Song Lyrics in Tamil

பாசமுள்ள பாண்டியரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகேப்டன் பிரபாகரன்

Pasamulla Pandiyaru Song Lyrics in Tamil


BGM

பெண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா…
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா…

குழு : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…

BGM

பெண் : நெத்தியில வட்டப்பொட்டு…
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு…
உத்தமி நா சொக்கிக்கிட்டு…
வாங்கிக்கட்டு கூரப்பட்டு…

குழு : நெத்தியில வட்டப்பொட்டு…
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு…
உத்தமி நா சொக்கிக்கிட்டு…
வாங்கிக்கட்டு கூரப்பட்டு…

ஆண் : ஏய்… கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள…
உள்ளூர ஊறுதடி தேன்போல…

குழு : கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள…
உள்ளூர ஊறுதடி தேன்போல…

பெண் : முத்தாரம்தான் வித்தாராம்தான்…
ஆண் : அரே அஹ்ஹா… ஆஆஆஆ…
பெண் : அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா…

ஆண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா…
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா…

ஆண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…

BGM

பெண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
ஆண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…

பெண் : கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…
ஆண் : கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…

பெண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…

ஆண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…

பெண் : வளந்து வளந்து வளந்ததிடாம…
புதிய பாட்டு பாட சொல்லி…

ஆண் : கெரங்கி கெரங்கி கெரங்கிடாம…
விடியும் போது கேக்க சொல்…

ஆண் : படிச்ச பாட்ட கேட்டதாறு…
படிக்கும் போது பாத்தாரு…

பெண் : ஹோய்ஹோய்ஹோய்…
ஹோய்ஹோய் ஹோய்…

BGM

ஆண் : கட்டழகு பெட்டகமே…
பொட்டு வச்ச ரத்தினமே…
நித்திரையா விட்டுபுட்டு…
நேரமெல்லாம் சுத்துனமே…

குழு : கட்டழகு பெட்டகமே…
பொட்டு வச்ச ரத்தினமே…
நித்திரையா விட்டுபுட்டு…
நேரமெல்லாம் சுத்துனமே…

பெண் : கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள…
நிக்காம கனவு வரும் உன்னால…

குழு : கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள…
நிக்காம கனவு வரும் உன்னால…

ஆண் : கல்யாணம்தான் நன்நேரம்தான்…
பெண்: அரே அஹ்ஹா… ஆஆஆஆ…
ஆண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா…

பெண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…

ஆண் : பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா…
பெண் : கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா…

ஆண் & பெண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…

ஆண் & பெண் : தந்தன நா தந்தன நா…
தந்தன நா தந்தன நா…


Notes : Pasamulla Pandiyaru Song Lyrics in Tamil. This Song from Captain Prabhakaran (1991). Song Lyrics penned by Gangai Amaran. பாசமுள்ள பாண்டியரே பாடல் வரிகள்.


ஆட்டாமா தேரோட்டமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன் & பிறைசூடன்சுவர்ணலதாஇளையராஜாகேப்டன் பிரபாகரன்

Aattama Therottama Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…
ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…

பெண் : வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான்…
கன்னி நான் ஆடுறேன்…
வலை போடுறேன்…
பாடுறேன் பதில் தேடுறேன்…

குழு : ஏ ரம்பா சம்பா சம்பாதான்…
அம்பா பொண்ணு ரம்பாதான்…
சம்பா ரம்பா சம்பாதான்…
ரம்பா சம்பா ரம்பாதான்… ஹோய்…

பெண் : ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…

BGM

பெண் : ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி…
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி…
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி…
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி…

பெண் : ராக்கோழி சத்தம் கேட்குது…
என் ராசாவே…
பூங்காற்றும் வட்டம் போடுது…

பெண் : வீராப்பு கண்ணில் பட்டது…
என்னை நீ தேட…
மாராப்பு மெல்ல சுட்டது…

பெண் : பொன் மானும் துள்ளி துள்ளி…
கொண்டாட்டம் போடாதோ…
புண்ணான நெஞ்சில் இன்று…
காயங்கள் ஆறாதோ…

பெண் : கன்னியின் எண்ணம் முடிவது…
திண்ணம் வா… ஹாஹா…

பெண் : ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…
ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…

பெண் : வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான்…
கன்னி நான் ஆடுறேன்…
வலை போடுறேன்…
பாடுறேன் பதில் தேடுறேன்…

குழு : ஏ ரம்பா சம்பா சம்பாதான்…
அம்பா பொண்ணு ரம்பாதான்…
சம்பா ரம்பா சம்பாதான்…
ரம்பா சம்பா ரம்பாதான்… ஹோய்…

பெண் : ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…
ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…

BGM

பெண் : யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு…
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு…

பெண் : நான் உன்னை காணாமல்…
நூலாக இளைச்சு…
நீ செல்லும் தடம் பார்த்து…
வலை போட்டு வளைச்சு…

பெண் : கண்ணாலே கட்டி வைக்கவா…
அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா…
பூ பந்தல் போட சொல்லவா…
அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா…

பெண் : பூ மஞ்சம் மெல்ல போட்டு…
போர்க்கோலம் காண்போமா…
போராட்டம் போன பின்பு…
பூபாளம் கேட்போமா…

பெண் : கன்னியின் எண்ணம் முடிவது…
திண்ணம் வா… ஹா ஹா…

பெண் : ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…
ஆட்டமா தேரோட்டமா…
நோட்டமா சதிராட்டமா…

பெண் : வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான்…
கன்னி நான் ஆடுறேன்…
வலை போடுறேன்…
பாடுறேன் பதில் தேடுறேன்…

குழு : ஏ ரம்பா சம்பா சம்பாதான்…
அம்பா பொண்ணு ரம்பாதான்…
சம்பா ரம்பா சம்பாதான்…
ரம்பா சம்பா ரம்பாதான்… ஹோய்…

குழு : ரம்பா சம்பா சம்பாதான்…
அம்பா பொண்ணு ரம்பாதான்…
சம்பா ரம்பா சம்பாதான்…
ரம்பா சம்பா ரம்பாதான்…

குழு : ரம்பா சம்பா சம்பாதான்…
அம்பா பொண்ணு ரம்பாதான்… ஹோய்…


Notes : Aattama Therottama Song Lyrics in Tamil. This Song from Captain Prabhakaran (1991). Song Lyrics penned by Gangai Amaran & Pirai Soodan. ஆட்டாமா தேரோட்டமா பாடல் வரிகள்.