Category Archives: சம்சார சங்கீதம்

சம்சார சங்கீதம் – Samsara Sangeetham (1989)

சொக்க வைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகிடி. ராஜேந்தர்சம்சார சங்கீதம்

Chokka Vaikum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா…
சொக்கத் தங்கம் நீதானா… ஓ…
சொக்க வைக்கும் சுல்தானா…
சொக்கத் தங்கம் நீதானா… ஓ…

ஆண் : பேரீச்சம் பழம் போல் பேர் சொன்னா இனிக்கும்…
ஓ மேரி ப்யாரி…

பெண் : மேரா நாம் மேரா நாம்…
சனம் சனம் சனம் சனம் ப்யாரி சனம்…
ஆண் : சலாம் சலாம்…

பெண் : மோகம் எல்லாம் என்னால் என்றால்…
முத்தம் இனாம்…
ஆண் : அரே வாஹ்வா வாஹ்வா…

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா…
சொக்கத் தங்கம் நீதானா… ஓ…

BGM

ஆண் : என் மேனி உருக…
குழு : உருக உருக உருக…
ஆண் : எழில் எல்லாம் தருக…
குழு : தருக தருக தருக…

ஆண் : ஹேய்… கோட்டை கட்டி அழகு இங்கே…
கொலு விருக்கும் கோலம் கண்டேன்…
நாட்டைக்கூட அடகு வைக்க…
நானும் இங்கே துணிஞ்சுவிட்டேன்…

ஆண் : மகுடம் எல்லாம்…
பெண் : ஹோய்…
ஆண் : அட வேண்டாமம்மா…
பெண் : ஹோய் ஹோய்…

ஆண் : உன் மடியில் கிடந்தால்…
பெண் : ஹாய்…
ஆண் : அது போதுமம்மா…
பெண் : ஹாய் ஹாய்…

பெண் : ராஜாதி ராஜா எல்லாம் கூஜா தூக்குவான்…
ரோஜாப்பூ என்னை அள்ள தாஜா பண்ணுவான்…

பெண் : மேரா நாம் மேரா நாம்…
சனம் சனம் சனம் சனம் ப்யாரி சனம்…
ஆண் : இன்ஷா அல்லாஹ்…

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா…
சொக்கத் தங்கம் நீதானா…

BGM

பெண் : சாம்ராட் என்ன…
குழு : என்ன என்ன என்ன…
பெண் : சாம்ராஜ்யம் என்ன…
குழு : என்ன என்ன என்ன…

பெண் : சும்மா சும்மா சும்மா சும்மா…
எம் முன்னே எல்லாம் சும்மா…
யம்மா யம்மா யம்மா யம்மா…
என் அழகு யம்மா யம்மா…

பெண் : யம்மா யம்மா நான் பதுமை யம்மா…
ஆண் : ஹஹஹஹ்…
பெண் : கும்மா கும்மா…
ஆண் : கும்மா கும்மா…
பெண் : ஆண்கள் அடிமையம்மா…

ஆண் : ஹோய்… முத்துப் பல்லு மோஹனத்தில் ராகம் படிச்சா…
பித்துக்கொண்ட தாசன் என்னை வாட்டி வதச்சா…

ஆண் : தேரா நாம் தேரா நாம்…
பெண் : சனம் சனம் சனம் சனம் ப்யாரி சனம்…
ஆண் : சலாம் சலாம்…

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா…
சொக்கத் தங்கம் நீதானா… ஓ…


Notes : Chokka Vaikum Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. சொக்க வைக்கும் பாடல் வரிகள்.


கண்களும் ஏங்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்டி. ராஜேந்தர்சம்சார சங்கீதம்

Kangalum Eanguthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…

ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
துணி போட்டு மறைச்சாக் கூட…
வாசம்தான் வீசுது வெளியே…
வெளிவேசம் போட்டாக்கூட…
பாசம்தான் தெரியுது கிளியே…

ஆண் : காதலிது பொல்லாதது போடி…
கண்ணாலதான் கதை பேசுது வாடி…

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…

BGM

ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான்…
தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்…

BGM

ஆண் : மிளகாய காய வச்சான்…
விழி அம்பை பாய வச்சான்…

BGM

ஆண் : பாதையில போகையில…
பாதிக் கண்ணால் பாக்கையில…
மனசுந்தான் உணர்ந்ததடி…
கொலுசுந்தான் கழண்டதடி…
எடுத்தது கொலுச கொடுத்தது மனச…
எடுத்தது கொலுச கொடுத்தது மனச…

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…

BGM

ஆண் : காய வச்ச தாவணி…
காத்தடிக்க பறந்ததடி…

BGM

ஆண் : காளையின் மேல் விழுந்ததடி…
காதலுந்தான் படர்ந்ததடி…

BGM

ஆண் : பூவ நீ வச்சப்போ ஓடையில விழுந்ததடி…
கை நீட்டி எடுக்கையில ஓடித்தான் போனதடி…
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா…
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா…

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…


Notes : Kangalum Eanguthu Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. கண்களும் ஏங்குது பாடல் வரிகள்.


சந்தேக புயலடிச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கே. ஜே. யேசுதாஸ்டி. ராஜேந்தர்சம்சார சங்கீதம்

Sandhega Puyaladicha Song Lyrics in Tamil


ஆண் : சந்தேக புயலடிச்சா சந்தோஷ பூ உதிரும்…
விதியோட விளையாட்டம்மா…
விதியோட விளையாட்டம்மா…

ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…

ஆண் : ஆவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க…
அழிவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க…
வாழ்க்கை என்னும் கண்ணாடிய இறைவன் கொடுக்கிறான்…
மதி கெட்ட மனிதன் ஏனோ போட்டு உடைக்கிறான்…

ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி…
வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி…

ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…

BGM

ஆண் : கண்ணிருந்தும் குருடனைப் போல நடப்பதேனம்மா…

BGM

ஆண் : பசும்பால பாழும் கள்ளா நினைப்பதேனம்மா…

BGM

ஆண் : சந்தேக நோய் வந்தா உறவ வாட்டுமே…

BGM

ஆண் : சொந்தங்கள பந்தங்கள பிரிய சொல்லுமே…

BGM

ஆண் : இரு மலர்கள் போல இரு பிள்ளை இருக்க…
அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க…
ஆண் பிள்ளை ஒரு பக்கம் பெண் பிள்ளை மறு பக்கம்…
எனச்சொல்லும் ஊர் சட்டம் விதி தீட்டும் சதி திட்டம்…

ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி…
வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி…


Notes : Sandhega Puyaladicha Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. சந்தேக புயலடிச்சா பாடல் வரிகள்.