Category Archives: ரசிகன் ஒரு ரசிகை

ரசிகன் ஒரு ரசிகை – Rasigan Oru Rasigai (1986)

ஏழிசை கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்ரவீந்திரன்ரசிகன் ஒரு ரசிகை

Ezhisai Geethame Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : ஏதோ ராகம் எனது குரலின் வழி…
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர…
கேட்கும் யாரும் உருகி உருகி விழ…
காதில் பாயும் புதிய கவிதை இது…

ஆண் : அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர…
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ…
ஏதோ நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்…
உயிரேஉயிரே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு…
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு…
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு…
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு…

ஆண் : உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை…
தனிமை கொடுமையில்லை…
இனிமை இனிமை இதுதான் நான்தான்…
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…


Notes : Ezhisai Geethame Song Lyrics in Tamil. This Song from Rasigan Oru Rasigai (1986). Song Lyrics penned by Vaali. ஏழிசை கீதமே பாடல் வரிகள்.


பாடி அழைத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்ரவீந்திரன்ரசிகன் ஒரு ரசிகை

Paadi Azhaithen Song Lyrics in Tamil


ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

BGM

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

ஆண் : வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

BGM

ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை…
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை…
தேவதை நீ என்று கண்டேன்…
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்…

ஆண் : நான் செய்த பாவங்கள்…
உன் நெஞ்சில் காயங்கள்…
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ…

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

BGM

ஆண் : நீ அந்த மாணிக்க வானம்…
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்…
உன்னிடம் நான் கொண்ட மோகம்…
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்…

ஆண் : மேடைக்கு ராஜா போல் வேசங்கள் போட்டாலும்…
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது…

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…

ஆண் : வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…

BGM


Notes : Paadi Azhaithen Song Lyrics in Tamil. This Song from Rasigan Oru Rasigai (1986). Song Lyrics penned by Vaali. பாடி அழைத்தேன் பாடல் வரிகள்.