Category Archives: ராஜரிஷி

ராஜரிஷி – Raja Rishi (1985)

சங்கரா சிவ சங்கரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாராஜரிஷி

Shankara Shiva Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கரா சிவ சங்கரா…
ஜெய ஜெய சந்திர சேகரா…
திருமுனிவன் தலை முடியும்…
இரு கரமும் சேவடியும்…
திரிகளென எரிய விட…
உதிரம் எனும் எண்ணெய் இட…

ஆண் : நான் படைத்த மெய் விளக்கு தேவா…
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா…

ஆண் : சங்கரா சிவ சங்கரா…
ஜெய ஜெய சந்திர சேகரா…

BGM

ஆண் : தவமே எந்நாளும் சிவமாக…

BGM

ஆண் : தவமே எந்நாளும் சிவமாக…
சிவமே என் வாழ்வின் தவமாக…
புலன் ஐந்தும் எந்தன் வசமாக…
புரிந்தேனே யோகம் பணிவாக…

ஆண் : நீலகண்டன் காலகண்டன் திருவடி…
காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி…
மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு…
யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு…

ஆண் : ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா…
ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா…

ஆண் : சங்கரா சிவ சங்கரா…
ஜெய ஜெய சந்திர சேகரா…
திருமுனிவன் தலை முடியும்…
இரு கரமும் சேவடியும்…
திரிகளென எரிய விட…
உதிரம் எனும் எண்ணெய் இட…

ஆண் : நான் படைத்த மெய் விளக்கு தேவா…
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா…

ஆண் : சங்கரா சிவ சங்கரா…
ஜெய ஜெய சந்திர சேகரா…

BGM

ஆண் : வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும்…
தனை வருத்தும் உடல்…
மெல்லக் கருகிடத் திருவிளக்கில்…
தெறித்திடட்டும் கனல்…

ஆண் : சத்திய ஒளி இங்கு எழுந்திட…
தத்துவ முனி உடல் அழிந்திட…
ரத்தமும் நதி எனப் பெருகிட…
சித்தமும் சிவம் என உருகிட…

ஆண் : அனலேந்தும் பெருமானே வருக…
திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக…
பிறை ஏந்தும் பெரியோனே வருக…
குறை தீர்க்க விளக்கேற்றித் தருக…

BGM

ஆண் : ஆடிய திருவடி சரணம்…
அம்பலவாணனே சரணம்…
உமையவள் தலைவனே சரணம்…
உலகத்து முதல்வனே சரணம்…

ஆண் : திருமேனி திரியாக எரிய…
இறைவா உன் அருள் ஆணை இடுக…
தவமான தவம் இங்கு புரிய…
சிவமே நின் கருணைகள் பொழிய…

ஆண் : ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர…
மறை தொழும் இறை அவன்…
அடியவர்க்கினியவன் சிவனே…

ஆண் : அழைத்ததும் உடன் வந்து…
அடைக்கலம் கொடுக்கின்ற அறனே…

ஆண் : எனக்கொரு கதி இல்லை…
உனையன்றி விதி இல்லை இறைவா…

ஆண் : கரிசனம் பிறக்கட்டும்…
தரிசனம் கிடைக்கட்டும் தலைவா… இறைவா…
சிவனே ஹரனே சிவனே ஹரனே…

BGM


Notes : Shankara Shiva Song Lyrics in Tamil. This Song from Raja Rishi (1985). Song Lyrics penned by Vaali. சங்கரா சிவ சங்கரா பாடல் வரிகள்.