Category Archives: தாவணிக் கனவுகள்

தாவணிக் கனவுகள் – Dhavani Kanavugal (1984)

ஒரு நாயகன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாதாவணிக் கனவுகள்

Oru Nayagan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…

ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்…
அவனிடம் நான் படித்தவன்தான்…
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்…

குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ…

குழு : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…

BGM

குழு : பூ மாலை புகழ் மாலை…
உனைத் தேடி வரும் வேளை…

ஆண் : அன்பும் நல்ல பண்பும்…
ரெண்டு கண் போல் காக்க வேண்டும்…

குழு : வா ராஜா வாவென்று…
வரவேற்பு தரும் வேளை…

ஆண் : பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு…
வாழ்த்தை ஏற்க வேண்டும்…

பெண் : இளைஞன் நல்ல கலைஞன்…
என்ற பேரை நீ வாங்கு…
ஆண் : லலலலலலா லா…

பெண் : நாளும் அந்த பேரால்…
இந்த ஊரை நீ வாங்கு…

ஆண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
பெண் : ஊரார்களின் இதயமாகிறான்…

BGM

ஆண் : பள்ளியிலே பாடங்களை படிக்கணும்…
நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்…

ஆண் : சத்துணவு திட்டங்களும் எதுக்குடா…
ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா…
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்…
பிறர்க்கு உதவணும்…

குழு : இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்…

ஆண் : அறிஞனா சிறந்த மனிதனா புரட்சி தலைவனா…
குழு : விளங்கும் காலம் வரும் நேரம் வரும்…

ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்று…
தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு…
எந்த நாளும் சொல்லும் வண்ணம்…
வள்ளல் போல வாழ வேணும்…
உள்ளங்களை ஆள வேணும்…

பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஆண் : ஊரார்களின் இதயமாகிறான்…

BGM

ஆண் : மேலாடை மூடாமல் பாவாடை போடாமல்…
பொண்ணு ஒன்னு போனா…
கண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்…

ஆண் : பூவும் வண்ண பொட்டு கொண்டு…
கொடி போல் நடை போடு…
குழு : லலலலாலாலா…

ஆண் : நாணம் குல மானம்…
தமிழ் பெண்ணின் பண்பாடு…

பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…

ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்…
அவனிடம் நான் படித்தவன்தான்…
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்…

குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ…

ஆண் & பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…


Notes : Oru Nayagan Song Lyrics in Tamil. This Song from Dhavani Kanavugal (1984). Song Lyrics penned by Vaali. ஒரு நாயகன் பாடல் வரிகள்.


செங்கமலம் சிரிக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
குருவிக்கரம்பை சண்முகம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதாவணிக் கனவுகள்

Sengamalam Sirikuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…

பெண் : கூ கூ குக்கு கூ கூ…
கூ கூ என கூவும் குயில்…
சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்…

பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…
கூ கூ என கூவும் குயில்…
சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்…

பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…

BGM

ஆண் : முத்தம் இடும் மாலை…
பெண் : வேளை…
ஆண் : மூடு விழா நாடகமோ…
நித்தம் இதழ் தேடும்…
பெண் : நேரம்…
ஆண் : நாணம் எனும் நோய் வருமோ…

பெண் : பூமாலை சூடாது…
பாய் தேட கூடாது…

ஆண் : எல்லை தனை தாண்டாது…
பிள்ளை என தாலாட்டு…

பெண் : மஞ்சள் தரும் நாள் கூறு…
வஞ்சம் இல்லை தாள் போடு…

ஆண் : காமன் கணை ஏவல் எனை…
காவல் மீற தூண்டுதே…

ஆண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…

BGM

பெண் : மங்கை இவள் தேகம்…
ஆண் : நோகும்…
பெண் : மோகனமாய் தாளமிடு…
கங்கை நதி பாயும்…
ஆண் : நேரம்…
பெண் : காதில் ஒரு சேதி கொடு…

ஆண் : நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம்…

பெண் : இன்ப கதை காணாது…
கண்கள் இமை மூடாது…

ஆண் : உன்னை கரை சேர்க்காது…
எந்தன் அலை ஓயாது…

ஆண் : சேவல் அது கூவும் வரை…
நாணம் ஓய்வு காணுமே…

ஆண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…

பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…

ஆண் : கூ கூ என கூவும் குயில்…
சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்…

பெண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…

ஆண் : செங்கமலம் சிரிக்குது…
சங்கமத்தை நினைக்குது…


Notes : Sengamalam Sirikuthu Song Lyrics in Tamil. This Song from Dhavani Kanavugal (1984). Song Lyrics penned by Kuruvikkarambai Shanmugam. செங்கமலம் சிரிக்குது பாடல் வரிகள்.