Category Archives: வெள்ளை ரோஜா

சோலைப் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவெள்ளை ரோஜா

Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

பெண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM

பெண் : சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு…
ஆண் : மான் விழி மாது நீயோ மன்மதன் தூது…

பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே…
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே…

ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே…
நீயும் வந்தாயே…
தாவிப் பாயும் மீனைப் போலே…
நானும் ஆனேனே…

பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை…
உன்னில் இங்கே கண்டேனே…

ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்…
சொல்லில் இங்கே கண்டேனே…

BGM

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM

ஆண் : சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே…
பெண் : ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்…

ஆண் : என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு…
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு…

பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும்…
காதல் வற்றாது…
திங்கள் வானில் தேயும்போதும்…
சிந்தை தேயாது…

ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்…
உன்மேல் அன்பு மாறாது…

பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட…
எந்தன் தேகம் தீண்டாது…

BGM

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

ஆண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…

ஆண் & பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM


Notes : Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil. This Song from Vellai Roja (1983). Song Lyrics penned by Muthulingam. சோலைப் பூவில் பாடல் வரிகள்.


oh-maanae-maanae-song-lyrics-in-tamil

ஓ மானே மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
என். காமராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவெள்ளை ரோஜா

Oh Maanae Maanae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… மானே மானே மானே…
உன்னைத்தானே…

ஆண் : ஓ… மானே மானே மானே…
உன்னைத்தானே…
என் கண்ணில் உன்னைக்கண்டேன்…
சின்னப்பெண்ணே…

பெண் : ஆசை நெஞ்சில்…
நான் போதைக்கொண்டேன்…
தன்னாளே சொக்கிப்போனேன்…
நானே நானே…

ஆண் : ஓ… மானே மானே மானே…
பெண் : உன்னைத்தானே…
என் கண்ணில் உன்னைக்கண்டேன்…
ஆண் : சின்னப்பெண்ணே…

BGM

ஆண் : ஹே… காலை பனித்துளி…
கண்ணில் தவழ்ந்திட…
கனவுகள் மலர்கிறது…

பெண் : பார்வை தாமரை…
யாரை தேடுது…
பருவம் துடிக்கிற்து…

ஆண் : ஆசையின் மேடை…
நாடகம் ஆடும்…

பெண் : ஆயிரம் பாடல்…
பாவையை தேடும்…

ஆண் : நீ தேவன் கோவில் தேரோ…
உன் தெய்வம் தந்த பூவோ…
நீ தேனில் ஊறும் பாலோ…
தென்றல் தானோ… ஹோய்…

பெண் : ஓ… மானே மானே மானே…
உன்னைத்தானே…
என் கண்ணில் உன்னைக்கண்டேன்…
சின்னப்பெண்ணே…

ஆண் : ஆசை நெஞ்சில்…
நான் போதைக்கொண்டேன்…
தன்னாளே சொக்கிப்போனேன்…
தேனே தேனே…

பெண் : ஓ… மானே மானே மானே…
ஆண் : உன்னைத்தானே…
என் கண்ணில் உன்னைக்கண்டேன்…
பெண் : சின்னப்பெண்ணே…

BGM

பெண் : ஹேய்… நீலபூவிழி ஜாலம் புரியுது…
நினைவுகள் இனிக்கிற்து…

ஆண் : காதல் கோபுரம் ஏந்தும் ஓவியம்…
கைகளில் தவழ்கிறது…

பெண் : மந்திரம் ஒன்றை…
மன்மதன் சொன்னான்…

ஆண் : மார்பினில் ஆடும்…
மேனகை வந்தாள்…

பெண் : என் ஆசை நெஞ்சின் ராஜா…
என் கண்ணில் ஆடும் ரோஜா…
என் காதல் கோவில் தீபம்…
கண்ணா வா வா… ஹோய்…

ஆண் : ஓ… மானே மானே மானே…
உன்னைத்தானே…
என் கண்ணில் உன்னைக்கண்டேன்…
சின்னப்பெண்ணே…

பெண் : ஆசை நெஞ்சில்…
நான் போதைக்கொண்டேன்…
தன்னாளே சொக்கிப்போனேன்…
நானே நானே…

ஆண் : ஓ… மானே மானே மானே…
பெண் : உன்னைத்தானே…
என் கண்ணில் உன்னைக்கண்டேன்…
ஆண் : சின்னப்பெண்ணே…


Notes : Oh Maanae Maanae Song Lyrics in Tamil. This Song from Vellai Roja (1983). Song Lyrics penned by N Kama Rajan. ஓ மானே மானே பாடல் வரிகள்.