சோலைப் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவெள்ளை ரோஜா

Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

பெண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு…
ஆண் : மான் விழி மாது நீயோ மன்மதன் தூது…

பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே…
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே…

ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே…
நீயும் வந்தாயே…
தாவிப் பாயும் மீனைப் போலே…
நானும் ஆனேனே…

பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை…
உன்னில் இங்கே கண்டேனே…

ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்…
சொல்லில் இங்கே கண்டேனே…

BGM

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM

ஆண் : சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே…
பெண் : ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்…

ஆண் : என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு…
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு…

பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும்…
காதல் வற்றாது…
திங்கள் வானில் தேயும்போதும்…
சிந்தை தேயாது…

ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்…
உன்மேல் அன்பு மாறாது…

பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட…
எந்தன் தேகம் தீண்டாது…

BGM

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

ஆண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…

ஆண் & பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM


Notes : Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil. This Song from Vellai Roja (1983). Song Lyrics penned by Muthulingam. சோலைப் பூவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading