Category Archives: கரிமேடு கருவாயன்

அடி கதை கேளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜாஇளையராஜாகரிமேடு கருவாயன்

Katha Kelu Song Lyrics in Tamil


ஆண் : அடி கதை கேளு கதை கேளு… ஏ…
கருவாயன் கதை கேளு… ஏ…

BGM

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
கரிமேட்டுக் கருவாயன் கதை போல…
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி…

ஆண் : கட்டுக் கதை இல்லை…
ஒட்டுக் கதை இல்லை…
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு…
வைகை நதிக்கரை ஓரத்துல…
அன்று வாழ்ந்து ஜெயிச்சவன் வரலாறு…

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி… ஆ…

BGM

ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…

ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…
மருத ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை…
சொந்தம் ஒரு ஆள் இல்லை…
பந்தம் அதுதான் இல்லை…
மலையும் மரமும் தவிர யாரும் இல்லை…

ஆண் : தங்கச்சிய பண்னை கற்பழிச்சான்…
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்…
இன்னும் பழி வாங்காது…
கண்ணில் இமை காயாது…
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்…

ஆண் : சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி…
சனங்கெல்லாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி…

ஆண் : அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி…
புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் போலீஸ்…

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…

BGM

ஆண் : தென்னை மரத்துல படுத்திருப்பான்…
ஆனா பூமியில கண்ண வச்சிருப்பான்…
கவட்ட வில்லும் உண்டு…
கையில் ஒரு வில்லுண்டு…
வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான்…

ஆண் : கன்னி கழியாத காளியம்மா…
இந்தக் கருவாயன் மேலதான் காதலம்மா…
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம…
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா…

ஆண் : சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள்…
இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள்…
இன்னும் சொல்லப் போனா…
இளமை வீணா போனா…
கருவாயன் கட்டைக்கு வெறகா போனா…

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…

BGM

ஆண் : நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும்…
அந்தப் பாறை மனசுல நீர் இருக்கும்…
ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும்…
கருவில் இருக்கும் பிள்ளை கையெடுக்கும்…

ஆண் : பாவிப் பயல்கள வேரழிச்சான்…
அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான்…
மானம் பிரதானம்தான்…
நானும் கரிகாலன்தான்…
இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்…

ஆண் : தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி…
தென்பாண்டி மன்னன்தான் வந்தான் உரு மாறி…
அவனை எண்ணிக் கொண்டு…
நெஞ்சில் சோகம் கொண்டு…
வாய்க்காலா போகுது வைகை நதி…

ஆண் : கதை கேளு கதை கேளு…

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல…
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி…

ஆண் : கட்டுக் கதை இல்லை…
ஒட்டுக் கதை இல்லை…
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு…
வைகை நதிக் கர ஓரத்துல…
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு…

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி… ஏ…


Notes : Katha Kelu Song Lyrics in Tamil. This Song from Karimedu Karuvayan (1986). Song Lyrics penned by Vairamuthu. அடி கதை கேளு பாடல் வரிகள்.


Kattukkulle Kadhal Kili Song Lyrics in Tamil

காட்டுக்குள்ள காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாகரிமேடு கருவாயன்

Kattukkulle Kadhal Kili Song Lyrics in Tamil


பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…

பெண் : பொழுதிருக்க பறந்திருச்சு…
போன தெசை மறந்திருச்சு…

பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…

BGM

பெண் : நீ போன தடம் பார்த்துத்தானே…
நிழல் தேடி வரும் இந்த மானே…
முகம் பார்க்கத் துடிச்சேனே நானே…
முந்தானை ஒனக்காகத்தானே…

பெண் : புலிக் கூட்டம் கிளி வேட்டை ஆட…
புழுவாக நான் தீயில் வாட…
புண்ணான என் சோகம் பாட…
பொதுக் கூட்டம் நான் எங்கு போட…

பெண் : மகராசன் பேச்சு…
மலை ஏறிப் போச்சு…
ஆனாலும் என் நெஞ்சு…
அலை பாயுதே…

பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…

பெண் : பொழுதிருக்க பறந்திருச்சு…
போன தெசை மறந்திருச்சு…

பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…

BGM

பெண் : வெதைச்சாலும் முளைக்காது என்று…
வெதை போட்டு வளர்த்தேனே அன்று…
வெறகோடு வந்தேனே அங்கு…
வெறகாகிப் போனேனே இங்கு…

பெண் : ராசாவே நான் இங்க யாரு…
பூவோடு சேராத நாரு…
ஏன் என்று ஒரு பார்வை பாரு…
என் சோகம் ஒன்றல்ல நூறு…

பெண் : ஆகாயம் பூமி…
தாங்காது சாமி…
அழுகின்ற பெண்ணுக்கு ஆயுள் கம்மி…

பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…

பெண் : பொழுதிருக்க பறந்திருச்சு…
போன தெசை மறந்திருச்சு…

பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…


Notes : Kattukkulle Kadhal Kili Song Lyrics in Tamil. This Song from Karimedu Karuvayan (1986). Song Lyrics penned by Vairamuthu. காட்டுக்குள்ள காதல் பாடல் வரிகள்.