Category Archives: அபூர்வ ராகங்கள்

அபூர்வ ராகங்கள் – Apoorva Raagangal (1975)

அதிசய ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே யேசுதாஸ்எம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Adhisaya Raagam Song Lyrics in Tamil


ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

BGM

ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

ஆண் : அதிசய ராகம்…

BGM

ஆண் : வசந்த காலத்தில் மழை தரும் மேகம்…
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்…
மோகம் ம்ம்ம் மோகம்…

ஆண் : வசந்த காலத்தில் மழை தரும் மேகம்…
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்…

ஆண் : இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்…
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்…
இந்திர லோகத்து சக்கரவாகம்…

ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

BGM

ஆண் : பின்னிய கூந்தல் கருநிற நாகம்…
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்…
பின்னிய கூந்தல் கருநிற நாகம்…
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்…

ஆண் : தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்…
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்…
அது என் யோகம்…

BGM

ஆண் : ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி…
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி…

BGM

ஆண் : இன்னுமா புரியல…

ஆண் : ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி…
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி…

ஆண் : முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி…
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி…
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி…
அவளொரு பைரவி அவளொரு பைரவி…

ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

BGM


Notes : Adhisaya Raagam Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. அதிசய ராகம் பாடல் வரிகள்.


கேள்வியின் நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகாஎம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Kelviyin Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…

BGM

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…
கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்…
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா…
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா…
கதை எப்படி அதன் முடிவெப்படி…
கதை எப்படி அதன் முடிவெப்படி…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்…

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ…
மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ…
செல்வாளோ செல்வாளோ…

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…
பதில் ஏதய்யா…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
பார்த்துக்கொண்டால்…

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன…

பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : உடல் எப்படி…
ஒன்றில் இருந்தாற்படி…
மனம் எப்படி…
நீ விரும்பும் படி…

BGM

பெண் : கேள்வியின் நாயகியே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

BGM

பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…
பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
திரு முருகா… திரு முருகா…

BGM


Notes : Kelviyin Nayagane Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. கேள்வியின் நாயகனே பாடல் வரிகள்.


ஏழு ஸ்வரங்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…

BGM

பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்… ம்ம்ம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…
இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்… ல்ல்ல்ல்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும்…
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு…
அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று…
நமக்காக நம் கையால் செய்வது நன்று…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…

BGM

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்…
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…

பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல…
வேதனையும் மாறும் மேகத்தைப் போல…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM


Notes : Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. ஏழு ஸ்வரங்களுக்குள் பாடல் வரிகள்.