அற்றைத் திங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்சிவப்பதிகாரம்

Atrai Thingal Song Lyrics in Tamil


BGM

பெண் : அற்றைத் திங்கள் வானிடம்…
ஆண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
பெண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
ஆண் : சொக்கும் ராகம் யாழிடம்…
பெண் : காணுகின்ற காதல் என்னிடம்…
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்…
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்…
ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்…
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடிதொட முடிதொட ஆசை பெருகிட…
நேரும் பலவித பரிபாஷை…

ஆண் : பொடிபட பொடிபட நாணம் பொடிபட…
கேட்கும் மனதினில் உயிரோசை…

பெண் : முடிதொட முகந்தொட மோகம் முழுகிட…
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்…

ஆண் : உருகிடஉருகிட ஏக்கம் உருகிட…
கூடும் அனலிது குளிர்வீசும்…

பெண் : குலுங்கினேன் உடல் கூசிட…
கிறங்கினேன் விரல் நீந்திட…

ஆண் : மயங்கினேன் சுகம் சேர்ந்திட…
தளும்பினேன் எனை நீ தொட…
பாய்ந்திட ஆய்ந்திட…

பெண் : காணுகின்ற காதல் என்னிடம்…
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்…
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்…

BGM

ஆண் : உடலெது உடையெது தேடும் நிலையிது…
காதல் கடனிது அடையாது…

பெண் : இரவெது பகலெது தேடும் சுகமிது…
சாகும் வரையிலும் முடியாது…

ஆண் : கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது…
காமப் பசி இது அடங்காது…

பெண் : வலமெது இடமெது வாட்டும் கதையிது…
தீண்டும் வரையிலும் விளங்காது…

ஆண் : நடுங்கலாம் குளிர்வாடையில்…
அடங்கலாம் ஒரு ஆடையில்…

பெண் : தயங்கலாம் இடைவேளையில்…
உறங்கலாம் அதிகாலையில்…
கூடலில் ஊடலில்…

ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்…
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…


Notes : Atrai Thingal Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Yugabharathi. அற்றைத் திங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading